ஆப்நகரம்

Survivor Tamil: எலிமினேட் ஆன இந்திரஜா.. தொடரும் பார்வதியின் அட்ராசிட்டி

மூன்றாம் உலகத்தில் இருக்கும் இந்திராஜா மற்றும் காயத்ரி இடையே ஒரு போட்டி நடத்தப்பட்டது, அதில் தோற்று இந்திரஜா நிரந்தரமாக எலிமினேட் ஆனார்.

Samayam Tamil 28 Sep 2021, 4:40 am
நேற்று பஞ்சாயத்தில் எலிமினேட் ஆன பார்வதியை மூன்றாம் உலகத்திற்கு அனுப்புகிறார் அர்ஜுன். அதன் பின் பார்வதி தனது டீமுக்கு ஒரு லெட்டர் எழுதி அனுப்புகிறார்.
Samayam Tamil survivor tamil sep 27 episode parvathy atrocity continues indraja eliminated from the show
Survivor Tamil: எலிமினேட் ஆன இந்திரஜா.. தொடரும் பார்வதியின் அட்ராசிட்டி


எல்லாரும் நடிக்கிறாங்க.. பார்வதி லெட்டர்

பார்வதி அனுப்பிய லெட்டர் பார்த்துவிட்டு படிக்க தொடங்குகின்றனர். "என்னை மட்டும் ஏன் ஒதுக்கி வெச்சீங்க.. நான் மாறியது உங்கள் கண்களுக்கு தெரியலையா" என தொடங்கி எல்லோரை பற்றியும் விமர்சித்து பேசி இருப்பார் பார்வதி.

அம்ஜத் மான் மற்றும் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள், நந்தா மற்றும் லக்ஷ்மி பிரியா ஆகியோர் திட்டம் போட்டு செயல்பட்டு என்னை வழியில் அனுப்பிவிட்டார்கள் என்றும் கூறுகிறார் பார்வதி.

இந்திரஜா எலிமினேஷன்

மூன்றாம் உலகத்தில் இருக்கும் இந்திரஜா மற்றும் காயத்ரி ஆகியோரை பார்க்கிறார் பார்வதி. அவர்கள் இவர் வந்திருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார்கள். அதன் பின் எலிமினேஷன் போட்டி தொடங்குகிறது.

அதில் போட்டியிடும் இருவரை கல் தேர்வு செய்வதன் மூலமா தேர்வு செய்கிறார் அர்ஜுன். இந்திரஜா மற்றும் காயத்ரி ஆகியோர் தான் மோத வேண்டியதாகிறது.

போட்டியில் நான்கு cubeகளை வலை போல இருக்கும் பாதியில் தள்ளி கொண்டு வந்து அதை அடுக்கி வைக்க வேண்டும். நான்கு பக்கமும் நிறங்கள் repeat ஆகாத வகையில் அதை அவர்கள் அடுக்க வேண்டும். விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் காயத்ரி வெற்றி பெறுகிறார். அதனால் இந்திரஜா எலிமினேட் ஆகி வீட்டுக்கு செல்கிறார்.

அடுத்த செய்தி