ஆப்நகரம்

விக்ராந்துக்கு நெற்றியில் பெரிய காயம்.. சர்வைவரில் ஏற்பட்ட விபரீதம்! ரசிகர்கள் ஷாக்

சர்வைவரில் இன்று விக்ராந்தின் நெற்றியில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு இருக்கிறது.

Samayam Tamil 28 Sep 2021, 11:01 pm

ஹைலைட்ஸ்:

  • விறகு வெட்டும்போது விக்ராந்துக்கு ஏற்பட்ட காயம்.
  • ரத்தம் வந்த நிலையில் மருத்துவர் சிகிச்சை.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Vikranth
சர்வைவர் ஷோ எவ்வளவு ஆபத்தானது என்பதை தற்போது போட்டியாளர்களாக சென்றிருப்பவர்கள் உணர தொடங்கி இருக்கிறார்கள். மூன்று நாட்காளாக சாப்பிடாமல் இருந்தேன் என இந்திரஜா நேற்று கூறியது அர்ஜுனுக்கே ஷாக் ஆக இருந்தது. தண்ணீர் மட்டுமே குடித்துகொன்டே இருந்தோம் என இந்திரஜா கூறி ஷோ ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அதன் பின் நடந்த போட்டியில் இந்திரஜா எலிமினேட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று சர்வைவரில் விக்ராந்துக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் விறகு வெட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு துண்டு அவரது நெற்றியை வந்து தாக்குகிறது. அகில் காயம் அடைந்த விக்ராந்துக்கு ரத்தம் சொட்டி இருக்கிறது. அப்போது மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார்.

அர்ஜுன் அது பற்றி கேட்டுவிட்டு, careful ஆக இருங்கள் என அட்வைஸ் கூறினார்.


அது மட்டுமின்றி காடர்கள் டீமில் இருக்கும் ராமுக்கு உடலில் skin அலர்ஜி ஏற்பட்டு இருக்கிறது, அதற்காகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த செய்தி