ஆப்நகரம்

நீயா நானா கோபிநாத்தின் கல்லூரி கால புகைப்படங்களில் ஒரு சில…

நீயா நானா கோபிநாத்தின் கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 4 Apr 2019, 12:50 pm
நீயா நானா கோபிநாத்தின் கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil gopi


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நீயா நானா என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி மற்றும் தனது புத்தகங்கள் மூலம் தனக்கென்று பல ரசிகர்களை கொண்டுள்ளார். அதனால் சின்னத்திரை தொகுப்பாளர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். நீயா நானா நிகழ்ச்சி மட்டுமில்லாமல், அவ்வப்போது திரைப்படங்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகள் என்று கலந்து கொண்டு வருகிறார்.

Also Read This:“கோட் அணிவதன் காரணம் என்ன”? ரகசியம் உடைத்த நீயா நானா கோபிநாத்!


இன்றளவிலும் நீயா நானா நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முழு காரணமும் கோபிநாத்தின் பேச்சு என்றே கூறலாம். கோபிநாத் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும் ரசிகர்கள் மத்தியில் கை தட்டல்கள் தான். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பத்திரிக்கையாளர், ரிப்போர்டர், நியூஸ் வாசிப்பவர், எழுத்தாளர் என்று பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கோபிநாத்தின் கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி