ஆப்நகரம்

லட்சுமியை தன்னுடன் அனுப்புமாறு கேட்கும் சௌந்தர்யா: அதிர்ச்சியடையும் கண்ணம்மா!

பாரதி கண்ணம்மாவில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 5 Apr 2021, 9:49 am

ஹைலைட்ஸ்:

  • போட்டி முடிந்து வீட்டிற்கு செல்ல தயார் ஆகும் கண்ணம்மா.
  • வர மறுத்து அடம் பிடிக்கும் லட்சுமி.
  • லட்சுமியை தன்னிடம் அனுப்புமாறு கண்ணம்மாவிடம் கேட்கும் சௌந்தர்யா.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா
என்னாச்சு கண்ணம்மா கிளம்பலையா? என கஸ்தூரி கேட்கும் போது, ஆமா அவ்வளவு தான் வேலை முடிஞ்சது கிளம்பனும் என கண்ணம்மா சொல்கிறார். அதன்பிறகு இங்க இவ்வளவு நாளா எப்படி சந்தோஷமா இருந்தியா, என கஸ்தூரி கேட்கிறாள். அப்போது கண்ணம்மா, பாரதியுடன் நடந்த சண்டை பற்றி சொல்கிறாள். இது மட்டும் பிரச்சனை இல்லை அத்தை குடும்பத்துல இருந்து எல்லாரும் வந்துருக்காங்க, அவங்ககிட்ட லட்சுமி பேசி ஏதாவது சொல்லிருவாங்களோன்னு பயமாவே இருந்துச்சு என கண்ணம்மா சொல்கிறாள்.
அப்போது அங்கு வரும் லட்சுமியிடம் கிளம்பு நம்ம போகணும்ல என கண்ணம்மா சொல்லும் போது, இன்னும் ஒரு வாரம் இங்க இருப்போமா? என கேட்கிறாள். அப்போது கண்ணம்மா கோபப்பட்டு 'இது என்ன உன் அப்பாவிட்டு சொத்தா' என கேட்டு அடிக்க வருகிறாள். அப்போது கஸ்தூரி அவளை தடுத்து, சின்ன பிள்ளைகிட்ட இப்படி நடந்துக்குற, அவ ஏதோ ஆசையில கேட்கிறாள் என கஸ்தூரி சொல்கிறாள்.

அதன்பிறகு சௌந்தர்யாவிடம் நடந்தவற்றை சொல்லும் கஸ்தூரி, இதுக்கு அப்புறம் வளரவளர லட்சுமி மனசுல இன்னும் ஆசை வளரும். நீங்க கண்ணம்மா கிட்ட லட்சுமியை வளர்க்குறது பற்றி கேட்டு பாருங்க என சொல்கிறாள். அதன்பிறகு கண்ணம்மாவிடம் வரும் சௌந்தர்யா, கஸ்தூரி சொன்னதை கேட்கிறாள். நீ ஒத்துக்க மாட்டான்னு தெரியும், அவளுக்கு எந்த நல்லதும் செய்ய முடியலன்னு என் மனசு அடிச்சுக்குது. 'லட்சுமியை என்கிட்ட கொடுக்குறியா நான் வளர்க்குறேன் ' என சௌந்தர்யா கேட்கும் போது, அதிர்ச்சி அடைகிறாள் கண்ணம்மா.

கடைசி போட்டியில் தோல்வியடைந்த கண்ணம்மாவிடம் சண்டை போடும் சௌந்தர்யா.

இந்த உலகத்துல எனக்குன்னு இருக்க ஒரே சொந்தம் லட்சுமி தான். அவ என்னோட உயிர், என்னோட உயிரையே என்கிட்ட இருந்து கேட்குறிங்களே அத்தை, இதுக்கு நான் ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன். நீங்க நினைச்ச அவளை தங்கத்தாலே குளிப்பாட்ட முடியும், ஆனா தாய் பாசம், அதை 'நான் தானா அத்தை அவளுக்கு கொடுக்க முடியும்'. ஒரு தாயா என்னால முடிஞ்சத நான் அவளுக்கு செய்றேன் என கண்ணம்மா சொன்ன பிறகு, இனிமே இதை பற்றி உன்கிட்ட பேச மாட்டேன் கண்ணம்மா என சௌந்தர்யா சொல்கிறாள்.

அதன்பிறகு பரிசுத்தொகையில் பாதியை சௌந்த்ர்யாவிடம் கொடுக்கும் கண்ணம்மா, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடுனது, இதுல பாதி உங்களுக்கு சொந்தம். இந்தாங்க அத்தை என பிடிவாதாமாக கொடுக்கிறாள். அதனை தொடர்ந்து லட்சுமியை பார்த்து, நான் ஊருக்கு கிளம்புறேன். நல்ல படிம்மா, உன் அம்மாகிட்டயும் உன்னை நல்ல பார்த்துக்க சொல்லிருக்கேன் என சௌந்தர்யா சொல்லி, கண்ணம்மாவிடம் அவளை அனுப்பி வைக்கிறாள்.

அதன்பிறகு பாரதியை பார்த்து, என் பேச்சுக்கு கட்டுப்பட்டு ஒருவாரம் இங்க இருந்ததுக்கு நன்றி என சௌந்தர்யா சொல்கிறாள். எண்ணெய் தான் எலிக்கு காயுது நீ ஏன்மா, பாரதி கூடவே சுத்துற என வெண்பாவை பார்த்து சௌந்தர்யா கேட்கும் போது, 'அம்மா நான்தான் அவளை என்னோட கூட்டிட்டு வந்தேன்' என பாரதி சொல்கிறான். இதற்கிடையில் கண்ணம்மாவை பார்த்து சரவணனும், சந்தியாவும் நாங்க கிளம்புறோம் என்று சொல்கின்றனர். கடைசி போட்டில நீங்க எனக்காக தானா விட்டு கொடுத்தீங்க என சந்தியா கேட்கும் போது, அதெல்லாம் எல்லாம் இந்த முழு போட்டிலையும் ஜெயிக்க கூடிய எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு என கண்ணம்மா சொல்கிறாள். இத்துடன் இன்றையா எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி