ஆப்நகரம்

முதல் மனைவி இருக்க.. 2வது மனைவியை கர்ப்பமாக்கிய பாவம் கணேசன் சீரியல் நடிகர்!

முதல் மனைவியை இன்னும் விவாகரத்து செய்யாத சீரியல் நடிகர் நவீன் தனது காதலியை இரண்டாவது திருமணம் செய்து அவரை கர்ப்பமாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 17 Apr 2022, 2:09 pm
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் தனது காதலியை இரண்டாவது திருமணம் செய்த நவீன் அவரை கர்ப்பமாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil tv actor naveens second wife pregnant
முதல் மனைவி இருக்க.. 2வது மனைவியை கர்ப்பமாக்கிய பாவம் கணேசன் சீரியல் நடிகர்!



கலக்கபோவது யாரு

விஜய் டிவியில் ஒளிபரப்பான‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நவீன். மிமிக்ரி, நகைச்சுவை, நடிப்பு என பட்டையை கிளப்பினார் நவீன். இதனை தொடர்ந்து படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது நவீனுக்கு.

பாவம் கணேசன்

பாவம் கணேசன் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன். நவீன் கடந்த 2016ஆம் ஆண்டு தனது தங்கையிடம் ட்யூஷன் படிக்க வந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தன்னுடன் நடைபெற்ற திருமணத்தை மறைத்து மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்ய முயல்வதாக நவீன் மீது திவ்யா புகாரளித்தார்.

போட்டோஸ்

இதையடுத்து காவல்துறையினர் நவீனை கைது செய்து விசாரித்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த நவீன் கிருஷ்ணகுமாரியுடன் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதும் போட்டோக்கள் மூலமே தெரியவந்தது.

முதல் மனைவி

ஆனால் முதல் மனைவி திவ்யாவிடம் இருந்து அவர் முறையாக விவாகரத்து பெறவில்லை என தெரிகிறது. இந்நிலையில் நவீனின் இரண்டாவது மனைவியான கிருஷ்ணகுமாரி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தனது இரண்டாவது மனைவி கிருஷ்ணகுமாரியுடன் பங்கேற்றார் நவீன்.

ரொம்ப தேங்க்ஸ்

அப்போது பேசிய கிருஷ்ணகுமாரி, உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது என்றும் நீங்க பிரிஞ்சிடுவீங்க என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள். சாபம் விட்ட எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ். இப்போவும் சொல்றேன் 'என்னை தாண்டி தான் எந்த கஷ்டமும் நவீனை நெருங்க முடியும் என்றார். நவீனும் கிருஷ்ணகுமாரியின் முகத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி