ஆப்நகரம்

அதிரடியாக களமிறங்கிய பிக்பாஸ் வனிதா; சேனலின் லோகோ எப்டி இருக்கு பாருங்க !

பிக்பாஸ் வனிதா, தான் துவங்கவுள்ள யூடியூப் சேனலின் லோகோவை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 26 Mar 2020, 10:53 am
வனிதா விஜயகுமார் எனும் பெயரில் அவர் தொடங்கவுள்ள சேனலுக்கான் லோகோவை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கான பதிவை இட்டுள்ளார் வனிதா.
Samayam Tamil vanitha


View this post on Instagram A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on Mar 25, 2020 at 12:33pm PDT

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுக்க பிரபலமானவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகள், அருண்விஜய்யின் சகோதரி என அறிமுகமாகியிருந்த வனிதாவுக்கு, பிக்பாஸ் தனி அடையாளத்தை கொடுத்தது. ஒரு கட்டத்தில் அவர் இல்லை என்றால் பிக்பாஸே இல்லை எனும் அளவுக்கு ரசிகர்கள் வெறுத்துவிட்டனர். இதை அறிந்த பிக்பாஸ் திரும்பவும் வனிதாவை உள்ளே கொண்டு வந்து கேமை திருப்பினார். டிஆர்பியில் உச்சம் தொட்டது அந்த நிகழ்ச்சி.

இந்நிலையில், அதே தொலைக்காட்சியில் வேறொரு நிகழ்ச்சி மூலம் நடுவராக அவதாரம் எடுத்தார் வனிதா. மேலும், பல நிகழ்ச்சிகளில் விருந்தினராகவும் பங்குபெற்றார். அப்போதெல்லாம் ரசிகர்களின் ஆதரவு அவருக்கு நிறையவே இருந்தது. யூடியூப் சேனல்களில் வனிதாவின் பேட்டிகள் நிறைய பேரால் பார்க்கப்பட்டது. அவரை குறிப்பிட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவது அவருக்கான ஆதரவாகவே நம்பப்படுகிறது. இந்நிலையில், யூடியூபில் சேனல் ஒன்றை தொடங்குகிறாராம் வனிதா.

இதுகுறித்து அறிந்த ரசிகர்களோ இது நிச்சயமாக குக்கிங் சேனலாகத்தான் இருக்கும் என்கிறார்கள். பிக்பாஸ் வீட்டிலேயே ஒழுங்காக சமைக்கத் தெரிந்தவர் வனிதாதான். அவரது சமையல் மிகவும் அற்புதமாக இருக்கும் என வீட்டில் இருப்பவர்களே கூறினார்கள். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது குக்கிங் சேனல்தான் என அடித்து சொல்கின்றனர் ரசிகர்கள். மேலும் தற்போதைய நிலவரப்படி, யூடியூபில் குக்கிங் சேனல்கள்தான் அதிக அளவில் வருமானம் ஈட்டுகின்றன.

View this post on Instagram A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on Mar 25, 2020 at 8:18pm PDT

ரேஷ்மாவும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தனது தோழியான வனிதாவுக்கா ஆதரவு தெரிவிக்குமாறு அவருடைய ஃபாலோவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி