ஆப்நகரம்

பவித்ராவின் திருமண போட்டோ வைரல்! ஆனால் உண்மை இதுதான்.. வெளியான வீடியோ

குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி திருமண கோலத்தில் இருக்கும் போட்டோ உண்மையில் விளம்பர படத்திற்கு எடுத்தது தானாம். அதன் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

Samayam Tamil 5 Apr 2021, 10:05 pm
பவித்ரா லக்ஷ்மி திரும்ண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரல் ஆன நிலையில், அது விளம்பரத்திக்காக எடுத்தது எனது தெரியவந்திருக்கிறது.
Samayam Tamil viral pic of pavithra lakshmi marriage is actually taken for advt
பவித்ராவின் திருமண போட்டோ வைரல்! ஆனால் உண்மை இதுதான்.. வெளியான வீடியோ



பவித்ரா லக்ஷ்மி

குக் வித் கோமாளி 2ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருப்பவர் பவித்ரா லட்சுமி. இந்த டே ஷோ மூலமாக மிகப்பெரிய அளவில் அவருக்கு ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வைல்டு கார்டு ரவுண்டில் அவர் ஜெயித்து இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் செலிப்ரேஷன் ரவுண்ட் நடைபெற்றது. அதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுக்கு பிடித்த நபர் ஒருவரை அழைத்து வந்தனர். அப்போது பவித்ரா லக்ஷ்மி தனது நண்பரை அழைத்து வந்திருந்தார்.

கோபமான புகழ் ரசிகர்கள்

ஏற்கனவே புகழ் மற்றும் பவித்ரா லக்ஷ்மி ஜோடி இடையே ஒரு ரொமான்ஸ் ட்ராக் தான் குக் வித் கோமாளி 2ல் நடந்து கொண்டிருக்கிறது.

அவர்களுக்கு இடையே புது நபர் இடையில் புகுந்துவிட்டார் என புகழின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

வைரலான திருமண போட்டோ - உண்மை இதுதான்

இந்நிலையில் பவித்ரா லக்ஷ்மி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் அதிகம் வைரலானது. இது என்ன அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது என அனைவரும் ஷாக் ஆனார்கள்.

போட்டோ இணையத்தில் கடந்த சில தினங்களாக அதிகம் வைரல் ஆகி வந்தது. இந்நிலையில் அது பற்றிய உண்மை விவரம் தெரியவந்து உள்ளது.

ஒரு விளம்பர படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படம் தான் அது. அது பற்றிய வீடியோ ஒன்றும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

வீடியோ

அடுத்த செய்தி