ஆப்நகரம்

கொரோனா பாதிப்பு : சுற்றுலா நிறுவனத்தை சாடும் விஜே அஞ்சனா - ஏன்?

சுற்றுலா நிறுவனம் ஒன்றின் செயலை கண்டித்து விஜே அஞ்சனா ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.

Samayam Tamil 17 Mar 2020, 11:20 am
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் அஞ்சனா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட சுற்றுலா நிறுவனத்துக்கு எதிரான பதிவு அது. கொரோனா சமயத்தில் இப்படி செய்வது முறையா என கேட்டு அந்த பதிவில் கொந்தளித்துள்ளார் அஞ்சனா. அவர் வெளியிட்டுள்ள பதிவு இதோ
Samayam Tamil anjana




தனது நண்பர், அவரின் திருமண நாளை ஒட்டி குறிப்பிட்ட நிறுவனத்தின் மூலம் சுற்றுலா செல்ல திட்டமிட்டு டிக்கெட் புக் செய்திருந்ததாகவும், கொரோனா காரணமாக அந்த பயணத்தை வேறொரு நாளுக்கு திட்டமிட்டு பயண தேதியை மாற்றக் கோரி 1000 முறைக்கு மேல் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் முறையான பதில் கூறாமல், டிக்கெட்டையும் கேன்சல் செய்யாமல் அந்த நிறுவனம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் அஞ்சனா.


மேலும் இரண்டு வயது குழந்தையுடன் இருக்கும் தனது நண்பருக்கு இதுதான் பதிலா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது. பலர் இதுபோன்று தாங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

உங்களது நண்பர் மட்டும் இல்லை, பொதுவாக இந்த காலத்தில் நிறைய மக்கள் சுற்றுலாவுக்கு திட்டமிட்டிருப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம் என ஒருவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி