ஆப்நகரம்

Diya Menon: பெண் குழந்தைக்கு தாயானார் பிரபல விஜே தியா மேனன்... குவியும் வாழ்த்து!

VJ Diya Menon: பிரபல விஜேவான தியா மேனன் பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

Samayam Tamil 20 Aug 2022, 11:13 am
பிரபல விஜேவான தியா மேனன் பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
Samayam Tamil vj diya menon blessed with girl baby
Diya Menon: பெண் குழந்தைக்கு தாயானார் பிரபல விஜே தியா மேனன்... குவியும் வாழ்த்து!



பிரபல விஜே

சன் டிவி மற்றும் சன் மியூஸிக்கில் பிரபல விஜேவாக பணியாற்றியவர் தியா மேனன். சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி மற்றும் கால் மேல காசு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

திருமணம்

சீரியல் மற்றும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த போதும் தியா, தொகுப்பாளராக மட்டுமே பணியாற்றி வந்தார். சிங்கப்பூடிரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் தியா.

வாளைக்காப்பு

தனியாக யூடியூப் சேனல் தொடங்கிய தியா அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தியா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். மேலும் தனது வளைக்காப்பு போட்டோக்களையும் ஷேர் செய்திருந்தார் தியா.

Thiruchitrambalam: தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் எப்படி? பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்!

பெண் குழந்தை

அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தியா மேனனுக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது. கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து இளவரசி வந்து விட்டாள் என்று கூறியுள்ளார்.

இளவரசி...

அவர் ஷேர் செய்துள்ள பதிவில், பிங்க் நிறத்தில் ஒரு இளவரசியுடன் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். உங்கள் எல்லா வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்கள் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து அனைவருக்கும் நன்றி.. என குறிப்பிட்டுள்ளார். தியாவை குழந்தையுடன் பார்த்த ரசிகர்கள் தாயும் சேயும் நலமாய் இருக்க வாழ்த்து கூறி வருகின்றனர்.

Meena: திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்ட ரசிகர்... நடிகை மீனாவின் நச் பதில்!

அடுத்த செய்தி