ஆப்நகரம்

தங்கம்மா.. தொகுப்பாளர் ரக்ஷன் ஷிவாங்கி உடன் எடுத்த போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்

விஜய் டிவி ரக்ஷன் தற்போது ஷிவாங்கி உடன் எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அதற்கு லைக்குகள் தற்போது குவிந்து வருகிறது.

Samayam Tamil 5 May 2021, 2:51 am
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட் ஆன நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இத்தபின் இரண்டாம் சீசன் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் எப்போது துவங்கும் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Samayam Tamil Aari


இதில் கோமாளியாக பங்கேற்ற ஷிவாங்கி சமீபத்தில் மீண்டும் குக் வித் கோமாளி செட்டுக்கு வந்து அங்கிருந்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து உள்ளது.

இந்நிலையில் தொகுப்பாளர் ரக்ஷன் ஷிவாங்கியை கட்டிபிடித்துக்கொண்டிருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ஷிவங்கியை பென்குயின் உடன் ஒப்பிட்டு உள்ளார். அதற்கு கமென்டில் 'தங்கம்மா' என கூறி உள்ளார் ஷிவாங்கி.

அண்ணன் தங்கை காம்போ சூப்பர் என நெட்டிசன்களும் தெரிவித்து வருகின்றனர். இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் இந்த புகைப்படத்திற்கு வந்து குவிந்திருக்கிறது.

View this post on Instagram A post shared by Rakshan (@rakshan_vj)

அடுத்த செய்தி