ஆப்நகரம்

எனக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் இதுதான்: VJ ரம்யா போட்டிருக்கும் வீடியோ

பிரபல தொகுப்பாளர் ரம்யா சுப்ரமணியம் தனக்கு தெரிந்த ஒரே விஷயம் இதுதான் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Samayam Tamil 20 Jun 2021, 1:23 am
சின்னத்திரையில் தொகுப்பாளராக நீண்ட காலம் இருந்து தற்போது வெள்ளித்திரையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் விஜே ரம்யா. அவர் ஹீரோயினாகவும் அறிமுகம் ஆக இருக்கிறார்.
Samayam Tamil vj ramya confesses she only knows gym workout and not yoga
எனக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் இதுதான்: VJ ரம்யா போட்டிருக்கும் வீடியோ


ரம்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே உடற்பயிற்சி மீது தான் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. அதில் உடற்பயிற்சி செய்து அவரது உடல் எடையை குறைத்து மிக மிக ஒல்லியாக மாறி இருக்கிறார். ரம்யா இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஒர்கவுட் மற்றும் பிட்னெஸ் வீடியோக்களுக்கு ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ரம்யா போட்டிருக்கும் பதிவு கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதில் அவர் கூறி இருப்பதாவது..

"இன்னும் ரெண்டு நாளில் International Yoga Day என எல்லோரும் யோகா போஸ் போட்டோக்களை போடு தாக்க போறாங்க. ஆனால் எனக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் இதுதான். அதனால் என் அன்பு நண்பர்களே, கருத்து என்னவென்றால் யோகாவோ, நடைப்பயிற்சியோ, டான்ஸோ, வெயிட் தூக்குவதோ.. Get some movement and activity going for a fit and fab YOU" என ரம்யா கூறி உள்ளார்.

யோகா மட்டுமில்லை எதாவது ஒரு activity செய்தாலும் நல்லது தான் என ரம்யாகூறியுள்ளார்.

View this post on Instagram A post shared by Ramya Subramanian (@ramyasub)

அடுத்த செய்தி