ஆப்நகரம்

மஞ்சள் உடை, சிஎஸ்கே கமிங் சூன்- விஜே ரம்யா என்ன சொல்ல வறாங்க?

விஜே ரம்யா மஞ்சள் நிற உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சிஎஸ்கே கமிங் சூன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Samayam Tamil 11 Mar 2020, 3:53 pm
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கிய விஜே ரம்யா, இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். தினம் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சிஎஸ்கே கமிங் சூன் என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தியுள்ளார். அத்துடன் மஞ்சள் நிற உடையிலும் காட்சியளிக்கிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Samayam Tamil vj ramya


மஞ்சளும் கறுப்புமாக நிற்கும் விஜே ரம்யாவின் புகைப்படம் இதோ..

View this post on Instagram Sunshine and Smiles 💛. #FeelingYellow #CSKComingSoon . OOTD - @muchlovestore 📷- @spoo_ky97 A post shared by Ramya Subramanian (@ramyasub) on Mar 11, 2020 at 1:42am PDT


மஞ்சள் காட்டு மைனா

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஆஹோ ஓஹோ அழகு என பாராட்டி வருகின்றனர். ரசிகர் ஒருவர் ரம்யாவை மஞ்சள் காட்டு மைனா என பாராட்டியுள்ளார். மஞ்சள் உடையில் பிரமாதமாக இருப்பதாகவும், கியூட்டாக இருப்பதாகவும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

View this post on Instagram La-La-Land 🧚🏻‍♀️. . 📷 - @rp3825 💄💇🏻- @kaviyaartistry @mani_hairstylist A post shared by Ramya Subramanian (@ramyasub) on Mar 8, 2020 at 8:05am PDT


இந்தியாவிலேயே சிறந்த கண்கள்

ரசிகர் ஒருவர் இவரது புகைப்படத்துக்கு கீழ் கமெண்ட்டில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரம்யா நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள். இந்தியாவிலேயே சிறந்த கண்கள் உங்களுடையது. அது காந்தத்தை போல எங்களை கவர்ந்து இழுக்கிறது என கூறியுள்ளார்.


விஜே ரம்யா தொகுப்பாளராக மட்டுமல்லாமல், பல படங்களில் நடித்தும் உள்ளார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றவை.
மங்காத்தா, மொழி, மாசு என்கிற மாசிலா மணி உள்ளிட்ட படங்களில் சில நிமிட காட்சிகளில் தோன்றியிருந்தாலும், ஓ காதல் கண்மணி, கேம் ஓவர், ஆடை உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் மாஸ்டர் படத்தில், நடித்துள்ளார்.

அடுத்த செய்தி