ஆப்நகரம்

Vanitha கொல்கத்தாவில் என்ன தான் நடந்தது? வீடியோ வெளியிட்ட வனிதா

வனிதா விஜயகுமார் கொல்கத்தா பயணத்தில் என்ன நடந்தது என வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

Samayam Tamil 12 Jun 2021, 9:43 pm
வனிதா ரகசிய திருமணம் செய்துகொண்டார் என வதந்தி சமீபத்தில் வந்த நிலையில் வனிதா, கொல்கத்தா பயண வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
Samayam Tamil what happened in kolkata vanitha vijayakumar video
Vanitha கொல்கத்தாவில் என்ன தான் நடந்தது? வீடியோ வெளியிட்ட வனிதா


வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் ஏற்கனவே பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட பிறகு பல்வேறு சர்ச்சைகல் வந்தது. சிறிது காலத்திலேயே அவரிடம் இருந்து பிரிந்தும் விட்டார் வனிதா.

இந்நிலையில் தற்போது வனிதா பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அது மட்டுமின்றி அவரது youtube சேனலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

திருமண வதந்தி

வனிதா பற்றி சமீபத்தில் ஒரு வதந்தி பரவியது. அவர் ரகசியமாக கொல்கத்தாவில் பைலட் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் என செய்தி பரவியது. ஆனால் அது முற்றிலும் பொய்யான செய்தி என வனிதா விளக்கம் அளித்தார். தான் தற்போது சிங்கிள் தான் என அவர் ட்விட்டரில் கூறி இருந்தார்.

இந்நிலையில் வனிதா கொல்கத்தாவில் என்ன நடந்தது என ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவரது மொத்த பயணதையும் வீடியோவில் காட்டி இருக்கிறார்.

வீடியோ

அடுத்த செய்தி