ஆப்நகரம்

அது ஏன் என்னை 'அவர்' காதலின்னே சொல்றீங்க?: கொந்தளிக்கும் பிக் பாஸ் பிரபலம்

ஆசிம் ரியாஸின் காதலி என்று பலரும் தன்னை அழைப்பது ஹிமான்ஷி குரானாவுக்கு பிடிக்கவில்லையாம்.

Samayam Tamil 6 Jul 2020, 6:49 pm
பஞ்சாபி படங்களில் நடித்து வருபவர் ஹிமான்ஷி குரானா(28). பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசனில் ஹிமான்ஷி குரானா கலந்து கொண்டு இந்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்தபோது ஹிமான்ஷி குரானாவுக்கும், சக போட்டியாளரான ஆசிம் ரியாஸுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
Samayam Tamil himanshi khurana


அதில் இருந்து பலரும் ஹிமான்ஷியை ஆசிம் ரியாஸ் காதலி என்று தான் கூறுகிறார்கள். ஹிமான்ஷி பூசினாற் போன்று இருப்பதை பார்த்து சமூக வலைதளவாசிகள் அவரை கிண்டல் செய்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து ஹிமான்ஷி குரானா கூறியிருப்பதாவது,

பிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பும், பின்பும் என்னை சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள். என் உடல் எடையை சொல்லிச் சொல்லி கிண்டல் செய்கிறார்கள். எனக்கு PCOS இருக்கிறது. அப்படி என்றால் என்னவென்று தெரியாதவர்கள், தயவு செய்து கூகுள் செய்து பார்க்கவும். பல பெண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது.

அந்த பிரச்சனை பற்றி தெரிந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். PCOS இருந்தால் உடல் எடை மாறிக் கொண்டே இருக்கும். சில சமயம் உடல் எடை வெகுவாக குறையும். சில சமயம் வெயிட் போடும். என் ரத்த அழுத்தம் கூட மாறிக் கொண்டே இருக்கும்.

சில சமயம் என் ரத்த அழுத்தம் ஒரேயடியாக குறைந்து மூன்று மணிநேரம் ஆக்சிஜன் மாஸ்க் அணிய வேண்டியது இருக்கும். நான் செல்போன் அழைப்பை ஏற்காவிட்டாலோ, காலையில் எழாவிட்டாலோ என் மேனேஜர் பயப்படுவார். நான் வீட்டில் இருக்கும்போது போனை தொடாதபடி என் குழு என்னை பார்த்துக் கொள்கிறது. இன்டர்நெட்டை ஆஃப் செய்த பிறகு வேலை பற்றி பேசக் கூடாது என்கிற விதி வைத்திருக்கிறோம்.

வீட்டில் இருக்கும்போது வீட்டு வேலைகள் செய்வது, நிறைய பேசுவது, விளையாடுவதுமாக இருக்கிறேன். அதன் மூலம் நெகட்டிவிட்டியில் இருந்து தூரமாக இருக்கிறேன். நேற்று இரவு என் மேக்கப் கலைஞர் கொரோனா வைரஸ் பிரச்சனையை நினைத்து கவலையில் இருந்தார். அதனால் அவரை ஊக்குவிக்க கார்டு விளையாடினோம்.

லாக்டவுனின்போது என்னை மீண்டும் கிண்டல் செய்துள்ளனர். யாரோ ஒருவரின் பாடல் வருவதாலும், சிலரை சமூக வலைதளத்தில் பின்தொடர்வதை நிறுத்தியதாலும் கலாய்க்கிறார்கள். இது என் சமூக வலைதள கணக்கு, யாரை பின்தொடர் வேண்டும், பின்தொடரக் கூடாது என்பது என் விருப்பம் ஆகும். எனக்கு ஆன்லைன் உறவில் நம்பிக்கை இல்லை.

நான் கடந்த 10 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். யாருக்காவது என்னுடன் பேச வேண்டும் என்றால் அவர்கள் எனுக்கு போன் செய்வார்கள் அல்லது நான் நேரடியாக பேசுவேன். நான் யாரையும் பின்தொடர விரும்பவில்லை. நான் பஞ்சாபி சினிமா துறையை சேர்ந்த இருவரை பின்தொடர்ந்தால் அதற்காக மற்றவர்களுக்கு என்னை தெரியாது என்றோ, எனக்கு அவர்களை தெரியாது என்றோ அர்த்தம் இல்லை.

யாராவது புதுப் பாடல் வெளியிட்டால் அது ஹிட்டானால் அவர்கள் என்னை ட்ரோல் செய்கிறார்கள். அந்த பாடல் சொதப்பிக் கொண்டாலும் தங்களின் தவறுகளை மறைக்க என்னை தான் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். ஆசிம் ரியாஸ் ரொம்ப நல்லவர்.

அது ஏன் என்னை எப்பொழுது பார்த்தாலும் ஆசிம் ரியாஸின் காதலி என்கிறார்கள். ஏன் அவரை ஹிமான்ஷி குரானாவின் காதலர் என்று சொல்வது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி