ஆப்நகரம்

தீ மிதிக்கும் சடங்கையும் முடிப்பாரா கண்மணி?: காற்றின் மொழி அப்டேட்

தீ மிதிக்கும் சடங்கை செய்யவிடாமல் கண்மணியை கடத்திவிடுகிறார்கள். அந்த சடங்கினை வெற்றிகரமாக முடிப்பாரா கண்மணி?.

Samayam Tamil 5 Nov 2020, 11:39 am
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் காற்றின் மொழி. கண்மணியும், மூர்த்தியும் தவறாக இருந்ததாக சித்தரித்து அவர் மீது வீண் பழி போடுகிறார்கள். கண்மணி மீது படிந்த கரையை போக்க வேண்டும் என்றால், ஊர் வழக்கப்படி கோவிலில் சம்பிரதாய சடங்குகளை செய்ய வேண்டும். அனைத்து சடங்குகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டால் அவர் குற்றமற்றவர் என்பது அந்த ஊராரின் நம்பிக்கை.
Samayam Tamil kanmani


அந்த சடங்குகளை கெடுப்பதற்காக தீபிகாவும், அவரது அம்மாவும் இணைந்து பல பிளான்களை போடுகிறார்கள். முதலாவதாக நடைபெற்ற மாவிளக்கு பூஜையில் அனைத்து விளக்குகளையும் தனது உடம்பில் வைத்தபடி இருக்கிறார் கண்மணி.

அனைத்து விளக்குகளும் அணைய வேண்டும். ஆனால் அது அணையாதபடி மாவிளக்கில் யாருக்கும் தெரியாமல் மெழுகினை சேர்த்து விடுகிறார் தீபிகா. எப்படி விளக்கு அணையப் போகிறது என அனைவரும் பதற்றத்தில் இருக்க, அந்த அம்மனே வந்து விளக்கு அணையும்படி செய்கிறார். அனைத்து விளக்குகளும் அணைந்து முதல் சடங்கில் வெற்றி பெறுகிறார் கண்மணி.

இரண்டாவதாக ஆணி செருப்பில் நடக்க வேண்டும் என்பது சடங்கு. அதை கெடுப்பதற்கென தீபிகா, ஆணி செருப்பு செய்பவரிடம் பணம் கொடுத்து, கூர்மைப்படுத்தி அதில் விஷத்தையும் தடவி, கண்மணியை கொலை செய்தாக வேண்டும் என்ற பிளானில் இருக்கிறார்.

அந்த ஆணி செருப்பு மீது சந்தோஷிற்கு சந்தேகம் வருகிறது. அந்த செருப்பை மாற்றிவிடலாம் என கேட்கிறார். அதனை ஒப்புக்கொள்ளாத ஊர் மக்கள், கண்மணி அதன் மீது தான் நடக்க வேண்டும் என கட்டளையிடுகிறார்கள். இப்போதும் கண்மணிக்கு துணையாக வருகிறார் அம்மன். அம்மனே வந்து சந்தோஷிடம் மஞ்சள் தண்ணீரை கொடுத்து அதனை கண்மணி கால்களில் ஊற்றும்படி தருகிறார்.

அதையும் இறைவனின் ஆசியில் வெற்றிகரமாக முடித்து விடுகிறார் கண்மணி. காலில் முழுவதும் புண்ணாக இருப்பதனை பார்த்த மருத்துவரோ, அந்த ஆணி செருப்பை பார்த்து கூர்மையாக இருப்பதையும், விஷம் தடவி இருந்ததையும் கூறுகிறார்.

கண்மணிக்கு கடைசியாக இருப்பது தீ மிதிப்பது மட்டும் தான். அவர் இதையும் சிறப்பாக முடித்துவிட்டால், குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்படும். இப்படி ஒவ்வொன்றிலும் வெற்றி பெறும் கண்மணி மீது கோபமடைந்த தீபிகாவோ, அவரை தீயில் இறங்கவிடாமல் செய்ய ஆட்களை வைத்து கடத்திவிடுகிறார்.

கண்மணி கிடைத்து விடுவாரா? கடைசி வேண்டுதலை செய்து முடிப்பாரா? குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பாரா என விறுவிறுப்பாக நகரும் காற்றின் மொழி சீரியலில் காணலாம்.

டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு வரியா, இல்லையா: பாரதியுடன் மல்லுக்கட்டும் கண்ணம்மா

அடுத்த செய்தி