ஆப்நகரம்

பிக் பாஸ் 5ல் போட்டியாளராக வரும் முக்கிய குணச்சித்திர நடிகர்? வேற லெவல் என்டர்டெயின்மெண்ட் இருக்கு

நடிகர் எம்எஸ் பாஸ்கர் பிக் பாஸ் 5ல் போட்டியாளராக வர போகிறார் என தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 27 Mar 2021, 6:22 pm
பிக் பாஸ் 5 போட்டியாளர் தேர்வு மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கலந்துகொள்ள போகிறார் என தகவல் பரவி வருகிறது.
Samayam Tamil will ms bhaskar enter bigg boss 5 tamil as contestant
பிக் பாஸ் 5ல் போட்டியாளராக வரும் முக்கிய குணச்சித்திர நடிகர்? வேற லெவல் என்டர்டெயின்மெண்ட் இருக்கு


பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5ம் சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கிவிட்டதாகவும், பல முக்கிய பிரபலங்கள் பிக் பாஸ் போட்டியாளர்களாக வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.

வழக்கம் போல இந்த வருடம் ஜூன் மாதத்தில் பிக் பாஸ் ஒளிபரப்பை தொடங்கும் என தெரிகிறது. கடந்த வருடம் கொரோனா காரணமாக பல மாதங்கள் தாமதம் ஆனது. ஆனால் இந்த வருடம் வழக்கம்போல தொடங்குவதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

போட்டியாளர்கள் தேர்வு

வரும் ஜூன் மாதம் முதல் பிக் பாஸ் துவங்க இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் பற்றிய எதிர்பார்ப்பு மிக அதிக அளவு இருக்கிறது. பல முக்கிய பிரபலங்களுக்கு பிக் பாஸ் வாய்ப்பு கதவை தட்டி இருக்கிறது.

குக் வித் கோமாளி கனி பிக் பாஸ் 5ல் போட்டியாளராக வர போகிறார் என சில நாட்களுக்கு முன்பு செய்தி கசிந்தது. ஆனால் அப்படி எந்த வாய்ப்பும் தனக்கு கிடைக்கவில்லை என அவர் கூறி இருக்கிறார் அவர். அதே போல நடிகர் நகுலும் தான் பிக் பாஸ் செல்வதாக வந்த செய்தி வதந்தி என கூறி உள்ளார்.

பிக் பாஸில் எம் எஸ் பாஸ்கர்?

ஏற்கனவே வெளியான பல தகவல்கள் பொய் என பிரபலங்களே மறுப்பு அறிக்கை வெளியிட்டு வரும் சூழலில் அடுத்து ஒரு சூப்பராக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகருமான எம்.எஸ்.பாஸ்கர் பிக் பாஸ் 5ல் போட்டியாளராக வர போகிறார் என தகவல் பரவி வருகிறது.

இருப்பினும் பிக் பாஸ் வாய்ப்பை எம்எஸ் பாஸ்கர் ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

அடுத்த சீசன் சுரேஷ் சக்கரவர்த்தியாக இருப்பாரா?

இதற்கு முந்தைய சீசன்களில் வயதான போட்டியாளர்கள் பலர் பங்கேற்று இருக்கிறார்கள்.பொன்னம்பலம் , மோகன் வைத்யா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் 4ல் பங்கேற்ற சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டில் இருந்தது குறைந்த நாட்கள் தான் என்றாலும் பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கி பரபரப்பை ஏற்ப்டுத்தினார்.

அந்த வரிசையில் அடுத்த சீசனில் வயதான போட்டியாளராக எம்.எஸ்.பாஸ்கரை கொண்டு வர தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி