ஆப்நகரம்

எழுந்து நடக்க தொடங்கிய யாஷிகா ஆனந்த்! வீடியோ இணையத்தில் வைரல்

நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது ஓரளவு குணமடைந்து சப்போர்ட் உடன் நடக்க தொடங்கி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Samayam Tamil 29 Oct 2021, 7:10 am
நடிகை யாஷிகா ஆனந்த் சில மாதங்களுக்கு முன்பு வேகமாக கார் ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் காரில் பயணம் செய்த தோழி மரணம் அடைந்தார். யாஷிகா படுகாயங்கள் உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil yashika aannand starts walking months after accident video goes viral
எழுந்து நடக்க தொடங்கிய யாஷிகா ஆனந்த்! வீடியோ இணையத்தில் வைரல்


யாஷிகாவுக்கு உடல் முழுவதும் பல்வேறு எலும்பு முறிவுகள் இருந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் ஆறு மாதங்களுக்கு படுத்தப்படுகையாக தான் இருக்க வேண்டும் என யாஷிகாவே உருக்கமாக கூறி இருந்தார்.

இந்நிலையில் யாஷிகா எழுந்து நடக்க தொடங்கி இருக்கிறார், மருத்துவர்கள் உதவியுடன் அவர் baby steps எடுத்து வைக்க தொடங்கி இருக்கிறார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்டு உள்ளார்.

அதை பார்த்த அவரது ரசிகர்கள் யாஷிகா விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram A post shared by ChennaiTimesTOI (@chennaitimestoi)

அடுத்த செய்தி