ஆப்நகரம்

Kamal Haasan :கமல் கட்சிக்கே பிக்பாஸ் தான் காசு கொடுக்குதோ..?

பிரபல நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் சீசன் 3யை தமிழில் தொகுத்து வழங்க 100 நாட்களுக்கு சம்பளம் மட்டும் ரூ. 100 கோடி என்று பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 9 May 2019, 3:22 pm

இந்தியா முழுவதும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் முதல், இரண்டாவது நிகழ்ச்சியை அடுத்த தற்போது மூன்றாவதாக நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் பல நட்சத்திரங்களால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியில் அந்தந்த மொழிகளில் பிரபலமாக இருப்பவர்களே போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
Samayam Tamil kamal


அந்த வகையில் தமிழில் கடந்த இரண்டு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த முறை மூன்றாவதாக இந்த நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா தொகுத்து வழங்கவுள்ளார் என்றெல்லாம் கூறப்பட்டது.

பிக்பாஸ் : தமிழுக்கு நயன்? தெலுங்குக்கு அனுஷ்கா?

ஆனால் இந்த 3வது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கவுள்ளாராம். மேலும் இந்த சீசனை தொகுத்து வழங்க அவருக்கு ரூபாய் 100 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பிஸியாக இருக்கும் கமல் ஹாசன்?

தற்சமயம் பிக்பாஸ் 3வது சீசனுக்கான ப்ரோமோஷூட் கோகுலம் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருட நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். ஜூன் முதல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

அடுத்த செய்தி