ஆப்நகரம்

Meenakshi Ponnunga: கார்த்திக், யமுனாவுக்கு ரகசிய கல்யாணம்? வெற்றி எடுத்த முடிவு - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 24 Feb 2023, 12:08 pm
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக்கு அவனது அம்மா வேறொரு பெண்ணை பார்ப்பதால் மனம் நொந்து போன யமுனா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து கிணற்றில் விழித்தது போல சக்தி கனவு கண்டு எழுந்து அழுது பயப்படுகிறாள்.
Samayam Tamil zee tamil meenatchi ponnunga serial 24 2 2023 update
Meenakshi Ponnunga: கார்த்திக், யமுனாவுக்கு ரகசிய கல்யாணம்? வெற்றி எடுத்த முடிவு - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்


அடுத்து வெற்றி மீனாட்சி வீட்டின் கல்கோயில் முன் அமர்ந்திருக்க வெற்றியின் மீது மரத்தில் இருந்து தாலி ஒன்று விழுகிறது. இதனால் வெற்றி யமுனாவுக்கு கல்யணம் செய்து வைத்து விடலாம் என்ற திட்டத்தை நண்பர்களிடம் சொல்கிறான்.

Leo: அப்போ ரஜினி...இப்போ விஜய்..இதான் உண்மை..பளிச் என பேசிய பிரபலம்..!

மறுநாள் காலையில் கல்யாணம் செய்து வைக்கும் திட்டத்துடன் வெற்றி நண்பர்களுடன் கிளம்ப, சக்தி வந்து விடுகிறாள். என்ன எங்காவது பிரச்சனை செய்ய கிளம்பிட்டீகளா? என கேட்க, ஒரு நல்ல காரியத்துக்கு செல்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.


அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அடுத்து வெற்றியும் அவனது நண்பர்களும் சாந்தாவை சந்தித்து யமுனாவுக்கு நல்லது செய்வது போல் பேசி மீனாட்சிக்கு தெரியாமல் கல்யாணம் செய்து வைக்க, யமுனாவை கோவிலுக்கு அழைத்து வர சொல்கிறார்கள்.

இந்த பக்கம் கார்த்தி கோகிலாவிடம் ஏன் எனக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க சென்றீர்கள் என்று கேட்க, அங்கே வந்த வெற்றி, அம்மா உங்க நல்லதுக்குதான் செய்வார்கள் என்று கோகிலாவுக்கு சாதகமாக பேசுகிறான்.

பின்பு வெற்றி கார்த்திக்கிடம் யமுனாவிற்கு வேறு ஒருவருடன் கல்யாணம் நடக்கப்போகிறது என்று பொய் சொல்லி கார்த்திக்கை தன்னுடன் ஜிப்பில் அழைத்துச் செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி