ஆப்நகரம்

என்னடா இது? டாய்லெட் ரோல் மாதிரி இருக்கே? ஆப்பிள் ஹோம்பேட்டை கலாய்த்த நெட்டிசன்கள்...!

ஆப்பிள் ஹோம்பேட்டை டாய்லெட் ரோல் மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

TNN 9 Jun 2017, 12:46 am
வாஷிங்டன்: ஆப்பிள் ஹோம்பேட்டை டாய்லெட் ரோல் மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Samayam Tamil twitter trolls the apple homepod
என்னடா இது? டாய்லெட் ரோல் மாதிரி இருக்கே? ஆப்பிள் ஹோம்பேட்டை கலாய்த்த நெட்டிசன்கள்...!


ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அதன் ஸ்மார்ட்போனாக கருதப்படும் ஐபோனை வாங்க கிட்னியை விற்கும் நிலைக்கு கூட இளைஞர்கள் செல்வதாக செய்திகள் கூற கேட்டிருப்போம். சமீபத்தில் சிவப்பு நிறத்தில் கொண்டு வந்த ஐபோனிற்கு பெரும் வரவேற்பு உருவானது. இந்நிலையில் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர கருத்தரங்கம் அமெரிக்காவில் நடைபெற்றது. அதில் புதிய தயாரிப்புகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகின.

அவற்றில் குறிப்பிடத்தக்கது ஹோம்பேட் எனப்படும் ஸ்பீக்கர்கள். இந்த ஸ்பீக்கர்கள் பார்ப்பதற்கு டாய்லெட்டில் பயன்படுத்தப்படும் ரோல் மாதிரி இருப்பதாக இணையதளத்தில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் ராணுவத் தொப்பி போல் உள்ளது என்றும், ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரம் போன்றும் கலாய்த்து வருகின்றனர். இதனை பல்வேறு வகைகளில் மீம்ஸ் போட்டு செயல்பட்டு வருகின்றனர்.

Twitter Trolls The Apple Homepod Because It's Shaped Like A Toilet Paper Roll.

அடுத்த செய்தி