ஆப்நகரம்

நாளை 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று, அதன் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 19 Apr 2016, 8:24 pm
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று, அதன் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vck 2nd list of candidates to be announced tomorrow
நாளை 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: திருமாவளவன்


தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, 25 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், முதல்கட்டமாக, 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.

இதர 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், புதன்கிழமை எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் எனக் கூறினார். உயர்மட்டக்குழு விரிவாக ஆலோசித்து வருவதால், பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி