ஆப்நகரம்

Adipurush Movie Troll Memes : அப்ப அனுமார் மட்டும்தான் கடவுளா? அவருக்கு மட்டும் ஃப்ரீ டிக்கெட் கொடுத்தா மத்த சாமிலாம் கோச்சிக்காதா? வைரல் தமிழ் மீம்ஸ்!

நடிகர் பிரபாஸ் நடித்து வெளியாகவுள்ள படம் ஆதிபுருஷ்.படத்தின் திரையரங்குகளில் அனுமாருக்காக ஒரு சீட்டு ஒதுக்கப்படும் என்று திரைப்பட தயாரிப்பு குழுமம் அறிவித்ததை தொடர்ந்து நெட்டிசன்கள் அதை ட்ரோல் செய்து மீம்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் அதிகம் பகிரப்படும் ஒரு சில மீம்களை இங்கு காணலாம்.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 6 Jun 2023, 5:16 pm
ஆதிபுருஷ் படத்துக்கு வரும் அனுமார் வாழைப்பழ சிப்ஸ் ஆர்டர் பண்ணுவாரா? என்று நெட்டிசன்கள் பலரும் அந்த படக்குழுவை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆதிபுருஷ் படக்குழுவின் அறிவிப்பிற்கு பிறகு அனுமார் தான் சமூக வலைத்தளம் முழுவதும் நிறைந்திருக்கிறார். அப்படி ட்ரெண்டாகி வரும் ஒரு சில மீம்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil adipurush movie troll tamil memes gone viral on internet
Adipurush Movie Troll Memes : அப்ப அனுமார் மட்டும்தான் கடவுளா? அவருக்கு மட்டும் ஃப்ரீ டிக்கெட் கொடுத்தா மத்த சாமிலாம் கோச்சிக்காதா? வைரல் தமிழ் மீம்ஸ்!


​ஆதிபுருஷ் ட்ரோல் மீம்ஸ்

3வது ஷோவுலேயே ஆஞ்சிநேயர் மட்டும்தான் இருப்பாரு ஜீ. அதுக்கு எதுக்கு ஒவ்வொரு ஷோவுக்கும் ஒரு சீட்டு?

​ஆதிபுருஷ் ட்ரோல் மீம்ஸ்

ஐயோ நமக்கு ஒரு சீட்டு ஒதுக்குறேன்னு சொன்னானுங்களே, ஆனா தியேட்டர்லையே நாம மட்டும்தான் இருப்போம்னு சொல்லாம விட்டுட்டானுங்களே.

ஆதிபுருஷ் ட்ரோல் மீம்ஸ்

ஐயா நான் வணங்கும் அனுமாரே, மத்தவங்க மாதிரி உனக்கு ஒரு சீட்டுலாம் கொடுத்து அசிங்கப்படுத்த மாட்டேன். தமிழ்நாட்டுல எல்லா சீட்டும் உங்களுக்குதான்.

ஆதிபுருஷ் ட்ரோல் மீம்ஸ்

அனுமன் வேஷம் போட்டுட்டு தியேட்டர் போன ஆதிபுருஷ் படத்துக்கு இலவச டிக்கெட் கிடைக்குமா?

​ஆதிபுருஷ் ட்ரோல் மீம்ஸ்

அப்ப உனக்கு அனுமார் மட்டும்தான் கடவுள்? அவரோட பாஸ் ராமரெல்லாம் பாத்தா உனக்கு சாமியா தெரில?

​ஆதிபுருஷ் ட்ரோல் மீம்ஸ்

ஐயா ஆஞ்சிநேயா எல்லா சீட்டையும் நீயே வெச்சிக்கோ. ஆனா, இந்த படத்துல இருந்து மட்டும் மக்களை காப்பாத்திடு.

ஆதிபுருஷ் ட்ரோல் மீம்ஸ்

தம்பி அந்த ஆறாம் நம்பர் சீட்ல உட்காந்துருக்க அனுமாருக்கு ஒரு பனானா சிப்ஸ் வித் எக்ஸ்ட்ரா சீஸ்.

​ஆதிபுருஷ் ட்ரோல் மீம்ஸ்

ஆஞ்சிநேயர் சார், ஆஞ்சிநேயர் சார் அந்த மலையை தூக்கும்போது உங்க கை வலிக்கவே இல்லையா? எந்த ஜிம்முக்கு போறீங்க?

​ஆதிபுருஷ் ட்ரோல் மீம்ஸ்

என்னடா டெய்லி மூணு ஷோவுக்கு போய் படம் பாத்துட்டு வரணுமா ஆஞ்சிநேயருக்கே வெயில் வெறுத்துறும்.

​ஆதிபுருஷ் ட்ரோல் மீம்ஸ்

ஐயோ ஜூன் 16 இலவச படத்துக்கு ஆசைப்பட்டு எத்தனை பேரு இப்டி வேஷம் போட்டுட்டு வர போறாங்களோ!

ஆதிபுருஷ் ட்ரோல் மீம்ஸ்

நல்ல வேளை இப்பலாம் பழைய மாதிரி ரீல் பேட்டி இல்ல, அப்புறம் அருணாச்சலம் கதை மாதிரி ஆகிடும்.

எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி