ஆப்நகரம்

CSK Memes Tamil : 3 ரன்ல தோத்துட்டீங்களே.. கீகீகீ.. நாங்க தோத்தது பரவாயில்லை, கடைசி வரைக்கும் நீங்க பீதிலயே இருந்தீங்கள்ல அதுவே போதும்.. வைரல் CSK மீம்ஸ்..



Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 13 Apr 2023, 12:27 pm
IPL 2023 : CSK vs RR மேட்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கடைசி பந்து வரை மேட்சை கொண்டு சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை படபடப்பாகவே வைத்திருந்தது. என்னதான் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தாலும் கடைசி வரை விறுவிறுப்பாக நம்மை சீட் நுனியில் உட்கார வைத்திருந்த மேட்ச். இதனால், சமூக வலைத்தளங்கள் முழுவதும் CSK மீம்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் சில உங்களுக்காக..
Samayam Tamil csk vs rr ipl tamil memes gone viral on internet
CSK Memes Tamil : 3 ரன்ல தோத்துட்டீங்களே.. கீகீகீ.. நாங்க தோத்தது பரவாயில்லை, கடைசி வரைக்கும் நீங்க பீதிலயே இருந்தீங்கள்ல அதுவே போதும்.. வைரல் CSK மீம்ஸ்..


Csk சிங்கம்..

சிங்கம் எப்பவுமே சிங்கம்தான். ஒவ்வொரு மேட்சுக்கும் புது புது கூஸ்பம்ஸ். பழைய மாதிரி மேட்ச் பாக்க வெச்சிட்டியே தல..

வைரல் CSK மீம்ஸ்..

நாங்க தோத்தது கூட பரவாயில்லை.. ஆனா கடைசி வரைக்கும் நீ பயத்துலயே இருந்தல்ல அது போதும்..

யாரு சாமி இவங்க..

எதுமே தெரியலைனாலும் எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுறது.. அப்றம் வந்துட்டு அவரு சரில இவரு சரில்லைனு உருட்டுறது..

கிங் தோனி..

தல வயசுல பழைய பிளேயர் எல்லாரும் டிவி பாத்துட்டு இருக்கும்போது, தல அந்த டிவில கிரௌண்ட்ல இறங்கி மேட்ச் ஆடுறது கெத்துதானே சார்..

இணையத்தில் வைரலாகும் ஐபிஎல் மீம்ஸ்..

உயிர் பயத்தை காட்டுனது சென்னைக்கோ, ராஜஸ்தானுக்கோ இல்ல, கிரிக்கெட் பாத்துட்டு இருந்த ரசிகர்கள் எங்களுக்குத்தான் உயிர் பயத்தை காட்டிட்டாங்க பரமா..

தல தோனி

அய்யா அண்ணாமலை நீ இன்னும் மாறவே இல்லை. அந்த ஸ்டைல், கெத்து, எனர்ஜி இன்னும் அப்டியே இருக்கு..

வைரல் ஐபிஎல் மீம்ஸ்..

தோத்தது நெனச்சி கூட பெருசா கவலையா இல்ல. எப்ப எப்பன்னு காத்துட்டு இருக்க RCB ரசிகர்களை நெனச்சாதான் கொஞ்ச பீதியா இருக்கு..

CSK மீம்ஸ்..

முதல்முறையா குந்தவை பாக்க வந்த மேட்ச் தோத்துட்டோமே.. தலைவி வருத்தப் பட்ருப்பாங்கன்னு நெனச்சாலே மனசு கஷ்டமா இருக்கு..

இணையத்தில் வைரலாகும் CSK மீம்ஸ்..

தோத்தாலும், ஜெயிச்சாலும் மீசையை முறுக்கு.. இப்டி சொல்லி எங்களை நாங்களே ஆறுதல் படுத்திக்கிறோம்..

சண்டை செய்வோம்..

ஜெயிக்கிறோமோ, தோக்குறோமோ பயம் இல்லாம சண்டை செய்யணும். அதுதான் ரொம்ப முக்கியம்..

CSK வெறித்தனம்..

சிங்கத்தோட கர்ஜனையை இனிமேதான் பாக்க போறீங்க மக்கா.. போர்கண்ட சிங்கம்..

விட்றாத தல..

தல தோனி கடைசி ஓவர்ல கிரௌண்ட்ல இருந்தாலே ரசிகர்களுக்கு நெஞ்சு வலி வந்துரும் போல..

தோனி 200..

IPL வரலாற்றில் 200 மேட்ச் கேப்டனாக இருந்து எல்லா சாதனைகளையும் வாங்கி வெச்சிட்டு இன்னைக்கும் கெத்தா இருக்காரு பாருங்க.. அவருதாங்க தல தோனி..

வைரல் IPL மீம்ஸ்..

என்னங்க இந்த பட்லரு இந்த மாதிரி பொளந்து கட்டிட்டு இருக்காரு.. யாரையோ மனசுல வெச்சிக்கிட்டு ஆடுறாரு போல..

ரஹானே vs அஸ்வின்..

என்னையவா சம்பவம் செய்ற உனக்கு பெருசா வெச்சிருக்கேன் ஆப்பு.. அண்ணன் என்ன தம்பியென்ன? சிஎஸ்கேக்கு விசில போடு..

குந்தவை வந்துருக்காங்க சார்..

சோழ தேசத்தில் போரை முடித்து விட்டு நேராக IPL மேட்ச் பாக்க வந்த அந்த அழகு தேவதையை பாருங்க சார்..

வடசென்னை CSK Version..

செந்திலை எப்படியாவது சம்பவம் செய்யணும்னு முடிவுலதான் இன்னைக்கு சென்னைக்குள்ளயே வந்து இறங்குனான் குணா தம்பி வேலு..

RR அட்மின்..

அது என்ன சார் CSK டீமுக்கு மட்டும் கருணையின் மறுவடிவமாவே மாறி போஸ்ட் போடுறீங்க? நீங்களும் தோனி ரசிகரா?

தோனியின் 200வது மேட்ச்..

எதிரணியினர் கூட எழுந்து நின்னு கையெடுத்து கும்பிடுற மரியாதை யாருக்கு வரும்? ஒன்லி தலைக்கு மட்டும்தான் எல்லா தலையும் குனியும்..

ராக்கி பாய் தோனி..

எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் தல தோனி வந்தா போதும் மரியாதை தானா வரும்.. கிரிக்கெட்டின் ராக்கி பாய்..

எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி