ஆப்நகரம்

Rajasthan Haunted Fort : பேய்கள் குடியிருக்கும் கோட்டை... இரவு நேரங்களில் நடக்கும் அமானுஷ்யங்களின் திகில் பின்னணி...!

உங்களுக்குப் பேய் மீது நம்பிக்கை இருக்கிறதா? பேய்கள் என்றால் பயமா? இந்த செய்தி ராஜஸ்தானில் உள்ள பேய் கோட்டை என அழைக்கப்படும் பாங்கர் கோட்டையைப் பற்றியதுதான். இன்றும் அந்த கோட்டையில் பேய்கள் வாழ்வதாகவும் அதனால் அந்த கோட்டைக்கு சூர்ய அஸ்தமனத்திற்கு பின்பும், சூரிய உதயத்திற்கு முன்பும் செல்ல யாருக்கும் அனுமதியில்லை. இப்படிப் பல திகில் வரலாற்றைக் கொண்ட இந்த கோட்டையைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம் வாருங்கள்.

Samayam Tamil 16 Nov 2019, 12:20 pm
உங்களுக்குப் பேய் மீது நம்பிக்கை இருக்கிறதா? பேய்கள் என்றால் பயமா? இந்த செய்தி ராஜஸ்தானில் உள்ள பேய் கோட்டை என அழைக்கப்படும் பாங்கர் கோட்டையைப் பற்றியதுதான். இன்றும் அந்த கோட்டையில் பேய்கள் வாழ்வதாகவும் அதனால் அந்த கோட்டைக்கு சூர்ய அஸ்தமனத்திற்கு பின்பும், சூரிய உதயத்திற்கு முன்பும் செல்ல யாருக்கும் அனுமதியில்லை. இப்படிப் பல திகில் வரலாற்றைக் கொண்ட இந்த கோட்டையைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம் வாருங்கள்.
Samayam Tamil facts about bhangarh fort in rajasthan that only few know
Rajasthan Haunted Fort : பேய்கள் குடியிருக்கும் கோட்டை... இரவு நேரங்களில் நடக்கும் அமானுஷ்யங்களின் திகில் பின்னணி...!


18ம் நூற்றாண்டு கோட்டை

ராஜஸ்தாஸ்தான் மாநிலம் ஆள்வர் மாவட்டத்தில் உள்ள ஆரவல்லி மலை தொடர் பகுதியில் உள்ள சரிஸ்கா என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் தான் இந்த பாங்கர் என்ற கோட்டை உள்ளது. இந்த கோட்டை தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இந்த கேட்டையை 18ம் நூற்றாண்டில் மன்னர் மாதோசிங் என்பவர் கட்டியுள்ளார்.

இரவு அனுமதியில்லை

இந்த கோட்டைக்கு தற்போது தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்து செல்கின்றனர். ஆனால் அவர்கள் யாருக்கும் இந்த கோட்டையில் மாலை 6 மணிக்கு மேல் இருக்க அனுமதி கிடையாது. அதே போலக் காலை சூரிய உதயத்திற்கு முன்பு இந்த கோட்டைக்கும் யாரும் செல்வது இல்லை.

அமானுஷ்யம்

இந்த கோட்டையில் அமானுஷ்யமான சில சத்தங்கள் வருவதாகவும் இந்த கோட்டையில் இரவில் பேய்கள் வாழ்வதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் நம்பி வருகின்றனர். இரவு நேரங்களில் அந்த கோட்டையில் பேய்களின் சத்தம், ஒருபெண் அழும் சத்தம், வளையல் சத்தம், பேயின் நிழல்கள், பயமுறுத்தும் விதமான ஒளிகள், திடீர் பாட்டு மற்றும் நடனமாடும் சத்தம் எல்லாம் கேட்பதாகப் பலர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Also Read : தமிழகத்தில் புரியாத புதிரான மர்மங்கள் நிறைந்த இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

வரலாறு

ஏன் இந்த கோட்டை இப்படி ஆனது என்பதற்காகவும் சில கதைகள் உள்ளன. இந்த கோட்டையைக் கட்டிய மாதோசிங் என்ற மன்னர் இந்த கோட்டையை கட்ட முடிவு செய்த போது அவர் தேர்வு செய்த இடம் தனது குரு பாலநாத் என்பவர் தியானம் செய்யும் இடமாக இருந்ததாம். இந்த கோட்டை கட்ட துவங்கியபோது அவர் தனது குருவிடம் அனுமதி கேட்டாராம்.

குரு சாபம்

அதற்கு குரு பாலநாத் தான் தியானம் செய்யும் இடத்தில் நிழல் விழாத அளவிற்குக் கோட்டை கட்ட வேண்டும் என சொன்னாராம். இதை ஏற்றுக்கொண்ட மன்னர் கோட்டையை கட்டினார். சில மாதங்களில் சூரியனின் கோணம் மாறும்போது குரு பாலநாத் தியானம் செய்யும் இடத்தில் நிழல் விழுந்ததாம்.

கோட்டை நிழல்

இதனால் கோபடைந்த குரு பாலநாத் தான் தியானம் செய்யும் இடத்தை நிழல் போட்டு மறைத்ததால் அந்த கிராமத்தில் இனி எந்த வீடு கட்டினாலும் நிழலுக்கு மேற்கூரை இருக்காது எனச் சாபமிட்டாராம். அதன் படி தற்போது அந்த கோட்டையைச் சுற்றி எதைக் கட்டினாலும் மேற்கூரை கட்ட முடியவில்லையாம். அதே நேரத்தில் மேற்கூரை கட்டினாலும் இடிந்து விழுவதாகவும் பலர் கூறுகின்றனர்.

Also Read : நடுக்கடலில் தத்தளித்த சிறுமி..! கடவுளாக வந்த கப்பல்...! இன்றும் விலகாத மர்மம்...

இளவரசி ரத்னாவதி

இதே போல இன்னொரு கதையும் உள்ளது. இந்த கோட்டையில் வாழ்ந்த இளவரசி ரத்னாவதி என்பவர் பேரழகியாக இருந்தாராம். அவரை திருமணம் செய்யப் பல ஆண்கள் ஏங்கினார்களாம். அதே போல ஒரு மந்திரவாதியும் ஏங்கினாராம். அவர் இளவரசியை மந்திர வசியம் மூலம் அடைய நினைத்தாராம். இந்த தகவலைக் கேட்ட இளவரசி அந்த மந்திரவாதியைக் கோட்டைக்கு அழைத்து தனது காவலர்களை வைத்து கோட்டையிலேயே கொன்றுவிட்டாராம் இளவரசி ரத்னாவதி, அப்பொழுது அந்த மந்திரவாதி விட்ட சாபம் தான் இன்று அந்த கிராமத்தில் யாரும் மேற்கூரை கட்ட முடியவில்லை எனச் சொல்லப்படுகிறது.

மர்மமான இரவுகள்

இதே போல இவர்களின் ஆன்மாக்கள் தான் இந்த கோட்டையில் இரவு நேரங்களில் பேயாக வாழ்வதாகவும் கூறப்படுகிறது. சிலர் இந்த கோட்டையில் முழு இரவை கழிக்க நினைத்து உள்ளே போனவர்கள் அன்றுடன் காணாமல் போய்விட்டனர். சிலர் உயிரை இழந்துவிட்டனர் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து இன்றும் அந்த பகுதி போலீசாரிடம் வழக்கு நிலுவையில் தான் உள்ளது.


Also Read : உலகில் யாராலும் கண்டுபிடிக்க முடியாத மர்மமான மனிதர்கள் இவர்கள்...! முடிந்தால் நீங்கள் கண்டுபிடியுங்கள்

மர்ம கோட்டை

இப்படி இரவு நேரங்களில் அந்த கோட்டையில் உண்மையில் மர்ம சத்தங்கள் வருகிறதா? பேய்கள் அந்த கோட்டையில் வாழ்கின்றவா? ஏன் இரவு நேரங்களில் அந்த கோட்டைக்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த பகுதியில் உண்மையில் எங்கும் மேற்கூரைகள் கட்டப்படுவதில்லையா? இப்படியான பல தகவல்கள் எல்லாம் மர்மமாகவே இருக்கிறது. இந்தக்கேள்விகளுக்கு எல்லாம் யாரிடமும் சரியான பதில் இல்லை என்பதே உண்மை

Youtube-Mystery behind Bhangarh Fort in Alwar district of Rajasthan video by Sohit mehendru

அடுத்த செய்தி