ஆப்நகரம்

எங்களுக்கு கோவா டூர் எல்லாம் வேண்டாம்.. 3 கிலோ வெங்காயம் கொடுங்க என கேட்ட மக்கள்..!

இலவசமாக கோவா அழைத்து செல்கிறோம் என்ற ஆஃபரை கூட விட்டு விட்டு மக்கள் வெங்காயத்தை தேர்வு செய்கிறார்கள் தெரியுமா? இது குறித்து முழுமையாக கீழே படியுங்கள்.

Samayam Tamil 13 Dec 2019, 2:41 pm
இலவசமாக கோவா அழைத்து செல்கிறோம் என்ற ஆஃபரை கூட விட்டு விட்டு மக்கள் வெங்காயத்தை தேர்வு செய்கிறார்கள் தெரியுமா? இது குறித்து முழுமையாக கீழே படியுங்கள்.
Samayam Tamil company is offering choice between a goa trip or onions in coupon people are choosing onions
எங்களுக்கு கோவா டூர் எல்லாம் வேண்டாம்.. 3 கிலோ வெங்காயம் கொடுங்க என கேட்ட மக்கள்..!


வெங்காயம்

இன்று இந்தியா முழுவதும் வெங்காயம் விலை கண்ணீரை வரவழைக்கிறது. சில நகரங்களில் இன்றும் ரூ200க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தட்டுப்பாடு இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால் தற்காலிகமாகத் துருக்கி மற்றும் எகிப்திலிருந்து வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

மார்கெட்டிங்

இந்நிலையில் இந்தியாவில் உள்ள வெங்காய தட்டுப்பாட்டைத் தனியார் பஸ் புக் செய்யும் நிறுவனம் ஒன்று தங்கள் மார்கெட்டிங் யுக்திக்காக பயன்படுத்தியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆஃபர்

இந்தியா முழுவதும் இந்த சேவையை நடத்தி வரும் அந்நிறுவனம் தினமும் தங்கள் ஆப் மூலம் பஸ் புக் செய்பவர்களுக்கு சில ஆஃபர்களை வழங்குகிறது. அந்த ஆஃபர்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களில் சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு அந்த ஆஃபரை வழங்குகிறது.

3 கிலோ வெங்காயம்

இப்படியாக அந்த ஆஃபர் பட்டியலில் 3 கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் எனவும் தேர்வு செய்துள்ளது. அந்த பட்டியில் கோவாவிற்கு இலவசமாக ட்ரிப் செல்வதும் இடம் பெற்றிருந்தது.

54 சதவீதம் பேர் தேர்வு

பஸ் புக் செய்த பலர் இந்த ஆஃபரை பயன்படுத்தி புக் செய்தநிலையில் 3 கிலோ வெங்காயத்தை 54 சதவீதம் பேர் தேர்வு செய்ததாகவும், 46 சதவீதம் பேர் கோவா ட்ரிப்பை தேர்வு செய்ததாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கோவா தேர்வு இல்லை

இதுகுறித்து அந்த தனியார் நிறுவனம் கூறும்போது: "பொதுவாக நாங்கள் கோவா ட்ரிப் ஆஃபரை அறிவிக்கும்போது அதனுடன் எந்த ஆஃபரை அறிவித்தாலும் மக்கள் அதைத் தேர்வு செய்யாமல் கோவா ட்ரிப்பை தான் தேர்வு செய்வார்கள். ஆனால் இந்த முறை பெரும்பான்மையான மக்கள் கோவா தேர்வை விட வெங்காயத்தைத் தேர்வு செய்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளனர்.

ஆச்சரியம்

வெங்காய தேர்வை அதிகம் பேர் தேர்வு செய்தது பலரை ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளது. இந்த செய்தி பலரது கவனத்தை ஈர்த்து வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி