ஆப்நகரம்

Inter caste marriage: ஜாதி மாறி திருமணம் செய்ய தடை; மீறினால் ரூ2 லட்சம் அபராதம்

குஜராத்தில் ஜாதி மாறி திருமணம் செய்ய 12 கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. அந்த கட்டுப்பாட்டை மீறுபவர்கள் ரூ2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 25 Jul 2019, 5:32 pm
குஜராத் மாநிலத்தில் உள்ள 12 கிராமங்களில் ஜாதி மாறி திருமணம் செய்தல், திருமணத்திற்கு முன்பு பெண்கள் செல்போன் பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil ஜாதி மாறி திருமணம் செய்ய தடை


குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டந்தேவாடா பகுதிக்கு உட்பட்ட 12 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள ஊர் மக்கள் ஒன்றை இணைந்து பஞ்சாயத்தில் ஒன்றை நடத்தினர்.

அந்த பஞ்சாயத்தில் தாகூர் என்ற சமூகத்தை சேர்ந்த கிராம தலைவர் ஒன்று கூடி இனி அந்த கிராமத்திற்குள் தாகூர் சமூகத்தை சேர்ந்தவர்கள் யாரும் ஜாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்றும், தாகூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் யாரும் திருமணத்திற்கு முன்பாக செல்போன் பயன்படுத்தகூடாது என்றும் முடிவு செய்தனர்.
Read More: நடிகர் மாதவனுக்கு இன்ஸ்டாகிராமில் "ஐ லவ் யூ" சொன்ன 18 வயது பெண்...!

மேலும் இந்த முடிவை எதிர்ப்பவர்கள் ஊரைவிட்டு ஒதுக்க வைக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர். இந்நிலையில் அந்த தொகுதியின் எம்எல்ஏ ஜெனிபன் நாகஜியும் தாகூர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரும் இந்த முடிவில் பங்கு இருப்பதா கூறப்படுகிறது

அந்த அறிவிப்பு வெளியான பின்பு மட்டும் இந்த கிராமத்தை சேர்ந்த வேறு ஜாதியினரை காதலிக்கும் சிலர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 10 வழக்குகள் நடந்து வருகிறது.

அடுத்த செய்தி