ஆப்நகரம்

16 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண்...

பெங்களூருவில் 16 வயது சிறுவனை 19 வயது பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 25 Feb 2020, 11:03 am
பெங்களூருவில் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியில் ஒரு வட நாட்டுச் சிறுவன் ஈடுபட்டு வந்துள்ளார். அவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
Samayam Tamil minor marriage
*Image only for representation


இந்த காதல் விவகாரம் பெண் வீட்டாருக்குத் தெரியவந்த போது அவர்கள் இவர்கள் காதலுக்குச் சம்மதம் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆனால் அந்த சிறுவனின் வீட்டார் சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் அந்த 19 வயது பெண் அந்த 16 வயது சிறுவனை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுவனின் வீட்டார் இருவருக்கும் திருமணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் திருமணத்திற்கு வந்த சிலருக்கு மணமகனின் வயது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த தகவல் எப்படியோ போலீசிற்குச் செல்ல போலீசார் விசாரணையில் மணமகனின் வயது 16 தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் மணப்பெண்ணைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி