ஆப்நகரம்

சிறுவனை திருமணம் செய்த பெண்...! கோர்ட் கொடுத்த வித்தியாசமான தீர்ப்பு

17 வயது சிறுவனைத் திருமணம் செய்த பெண்ணிற்கு தண்டனை வழங்க முடியாது என கோர்ட் தெரிவித்துள்ளது

Samayam Tamil 12 Jan 2020, 1:00 pm
இந்தியத் திருமண சட்டப்படி திருமண வயது 18. 18 வயதைக் கடந்தவர்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். இந்த திருமணத்தைப் பதிவு செய்ய வயது சான்றிதழ் மிகவும் முக்கியம். இவையெல்லாம் நமக்குத் தெரியும்.
Samayam Tamil சிறுவனை திருமணம் செய்த பெண்


18 வயதிற்கு குறைவானவர்கள் திருமணம் செய்தால் என்ன ஆகும்? அது குழந்தை திருமணமாகக் கருதப்பட்டு அந்த திருமணத்தை நடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள். இந்தியாவைப் பொறுத்தவரைப் பெண்களுக்குத் தான் குறைந்த வயது திருமணம் நடக்கும்.

வீட்டில் பெற்றோர்கள் கடமையை முடித்து விட வேண்டும் என்பதற்காகவே பெண்குழந்தைகளுக்குப் படிப்பு முடியும் முன்பே திருமண ஏற்பாடுகளைச் செய்து விடுகின்றனர்.

Also Read : "எனக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை இருக்கிறது" 4 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தீராத மர்மம்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த வழக்கு இதற்கு நேர் எதிர்மாறாக நடந்துள்ளது. 21 வயது பெண் ஒருவர் 17 வயது சிறுவனைத் திருமணம் செய்துள்ளார். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணையிலிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் சந்தான கவுடா தலைமையிலான அமர்வு. இந்த திருமணத்தைக் குழந்தை திருமணமாகக் கருத முடியாது எனவும், இதைக் குற்றம் எனக்கருதி யாருக்கும் தண்டனை வழங்க முடியாது என்றும், தன்னை விட வயது அதிகம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக அந்த சிறுவனை கோர்ட் தண்டிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

பெண்கள் சிறுவயதில் திருமணம் செய்தால் திருமணம் செய்தவர்கள் உள்ள ஒட்டு மொத்த குடும்பத்தினரையும் தண்டிக்கும் கோர்ட் இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி