ஆப்நகரம்

Sunny Baba : ஆங்கில பாடலை பாடி அசத்தும் முதியவர் - வைரல் வீடியோ

பாட்னாவில் பிச்சை எடுக்கும் முதியவர் ஒருவர் பாடல் பாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 4 Apr 2020, 10:17 am
சாலைகளில் பிச்சை எடுக்கும் நபர்கள் வயது முதிர்வு, பணம் இல்லாதது, ஆதரவாக யாரும் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரோட்டிற்கு வருகின்றனர். அவர்கள் எல்லாம் மிக சாதாரண மனிதர்கள் என்று தான் நாம் நினைத்திருப்போம். ஆனால் அவர்களுக்கும் இருக்கும் அசாதாரண திறமைகள் குறித்து யாருக்கும் தெரியாது.
Samayam Tamil sunny baba


சில நேரங்களில் அவர்களின் அசாதாரண திறமைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி விடும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணு மோண்டல் என்ற பெண் ரயில் நிலையத்தில் பாட்டுப்பாடி வெளியான வீடியோ வைரலான நிலையில் அவர் சினிமாவில் பாட்டு பாடும் அளவிற்கு வளர்ந்த சம்பவம் இந்தியாவே அறியும்.

அப்படியான ஒரு வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகியுள்ளது. அதில் பாட்னாவில் தெருவொரங்களில் பிச்சை எடுத்து வரும் ஒரு முதியவர் அழகாக அமெரிக்க பாடகரான ஜிம் ரெவ்ஸின் ஆங்கில பாடலை பாடுகிறார். இதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Also Read : ஞாயிற்றுக்கிழமை ஏன் விடுமுறை வழங்கப்படுகிறது தெரியுமா?

ரோட்டில் பிச்சை எடுக்கும் முதியவர் ஒருவர் அழகாக ஆங்கில பாடல் பாடுவது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பலர் ஷேர் செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி