ஆப்நகரம்

துணை போலீஸ் கமிஷனரான 12ம் வகுப்பு மாணவி...! மகளுக்கு தந்தை சல்யூட் அடித்து பெருமிதம்...!

முதல்வன் படத்தில் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக இருப்பார். அதே போல ஒரு சம்பவம் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்துள்ளது.

Samayam Tamil 10 May 2019, 4:38 pm
12ம் வகுப்பு ஐஎஸ்சி போர்ட்டிற்கான தேர்வு முடிவுகள் கடந்த 7ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரிச்சா சர்மா என்ற பெண் 99.25 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 4வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்தார்.
Samayam Tamil துணை போலீஸ் கமிஷனரான 12ம் வகுப்பு மாணவி.


ரிச்சாவை கவுரவிக்கும் வகையில் கொல்கத்தா போலீசார் அவருக்கு ஒரு நாள் துணை கமிஷ்னர் பதவி வழங்கினர். கொல்கத்தாவின் தென்கிழக்கு பகுதியில் ரிச்சா கடந்த 8ம் தேதி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட்டார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரிச்சாவின் தந்தை ராஜேஷ் சிங்கும் கொல்கத்தா போலீசில் தான் பணியாற்றி வருகிறார். ரிச்சா பணியாற்றியபோது அவரது தந்தையை அவருக்கு கீழ் பணியாற்ற கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.

தனது மகள் ஒரு நாள் துணை கமிஷனராக பதவியேற்ற பின்பு அவரின் தந்தை மகளுக்கு சல்யூட் அடித்த காட்சி பலரை மெய் சிலர்க்க வைத்தது. மேலும் தனது பதவி முடியும் போது தனது கடைசி உத்தரவாக ரிச்சா தனது தந்தைக்கு சீக்கிரம் வீட்டிற்கு வரும் படி உத்தரவிட்டு சென்றார். இந்த சம்பவமும் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வரும் காலத்தில் ரிச்சா யூபிஎஸ்சி தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதையே தனது கனவாக வைத்திருப்பதாக கூறினார்.

அடுத்த செய்தி