ஆப்நகரம்

சரக்கு என நினைத்து ரூ300க்கு சுக்கு காபியை வாங்கி ஏமாந்த குடிமகன்கள்

விருதுநகரில் சரக்கு என நினைத்து சில குடிமகன்கள் சுக்குகாபி வாங்கி ஏமாந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 4 Apr 2020, 11:31 am
விருதுநகரில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் ஒரு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் வாசலில் சிலர் எப்படியாவது மது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் தங்களிடம் மது பாட்டில் ஒன்று இருக்கிறது. அதை ரூ300 கொடுப்பவர்கள் வாங்கி கொள்ளலாம் என கூறினர்.
Samayam Tamil sarakku


அதை நம்பி சிலர் அவர்களிடம் ரூ300 கொடுத்து குவாட்டர் பாட்டில்களை வாங்கினர். அதன் பின் அங்கு போலீஸ் வருவதாக கூறி அங்கிருந்து பைக்கில் வந்த இருவரும் தப்பி சென்றனர். இவர்களும் போலீசிற்கு பயந்து வீட்டிற்கு ஓட்டம் பிடித்தனர்.

Also Read : ஞாயிற்றுக்கிழமை ஏன் விடுமுறை வழங்கப்படுகிறது தெரியுமா?

வீட்டில் சென்று மது பாட்டிலை திறந்து குடித்த போது தான் தெரிந்தது. அது உடலை கெடுக்கும் மது அல்ல. உடலுக்கு ஆரோக்கியம் தரும் சுக்கு காபி என்று. இதனால் மதுவிற்காக காத்திருந்த குடிமகன்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

ஊரடங்கு காலத்தில் மதுவிற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குடிமகன்கள் எப்படியாவது சரக்கு கிடைக்காதா என ஏங்கி தவித்து வரும் சூழ்நிலையில் சரக்கு என சொல்லி இருவர் சுக்குகாபி யை ரூ300க்கு விற்பனை செய்த சம்பவம் பலருக்கு பெரும் பாடமாக அமைந்துள்ளது.

அடுத்த செய்தி