ஆப்நகரம்

நீங்கள் வாக்களிப்பதற்காக அரசு எவ்வளவு பணம் செலவு செய்துள்ளது தெரியுமா?

2019ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்றுடன் 7 கட்ட வாக்குப்பதிவு பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் மே -23ம் தேதி வாக்கு எண்ணும் பணிகள் மட்டுமே பாக்கியிருக்கிறது. இந்தாண்டு நடந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவிபேட் என்ற இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது.

Samayam Tamil 20 May 2019, 6:15 pm
2019ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்றுடன் 7 கட்ட வாக்குப்பதிவு பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் மே -23ம் தேதி வாக்கு எண்ணும் பணிகள் மட்டுமே பாக்கியிருக்கிறது. இந்தாண்டு நடந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவிபேட் என்ற இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது. இதனால் இந்தாண்டிற்கான தேர்தல் செலவுகள் அதிகமாகயிருந்தாலும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்த நம்பிக்கையின்மையை போக்க இந்த விவிபேட் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.
Samayam Tamil நீங்கள் வாக்களிப்பதற்காக அரசு எவ்வளவு பணம் செலவு செய்துள்ளது தெரியுமா


இந்தியாவில் கடந்த 1951ம் ஆண்டு நடந்த உலகில் மிகப்பெரிய ஜனநாயக பொது தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் 17 கோடி வாக்களர்கள் வாக்களித்தனர். அதற்காக அப்பொழுது ஒரு வாக்காளருக்கு 60 பைசா என்ற கணக்கில் தேர்தல் செலவானது.

ஆனால் அன்றைவிட இன்று தேர்தல் செலவும் நீங்கள் நினைத்துப்பார்க்க முடியாதபடி அதிகமாகிவிட்டது. இந்தாண்டிற்கான தேர்தல் செலவு தொகையாக ரூ6500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் ஜனநாயக பொது தேர்தலின் போது ரூ10 கோடி தான் செலவு செய்யப்பட்ட நிலையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த பொது தேர்தலுக்காக ரூ1,483 கோடி செலவு செய்யப்பட்டது.

2014ம் ஆண்டு நடந்த பொது தேர்தலுக்காக ரூ3870 கோடி செலவு செய்யப்பட்டது. தற்போது அதை எல்லாவற்றையும் விட அதிகமாக ரூ6500 கோடி செலவு தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை வைத்து கணக்கிடும் போது முதல் ஜனநாயக தேர்தலில் ஒரு வாக்காளர் வாக்களிக்க அரசு 60 பைசாவை செலவு செய்தது. இது கடந்த 2004ம் ஆண்டு அது ரூ17 ஆக இருந்தது. 2009ம் ஆண்டு ரூ 12 ஆகவும், 2014ம் ஆண்டு தேர்தலுக்கு ஒரு வாக்காளருக்கு ஆகும் செலவு ரூ46 ஆகவும் இருந்தது.

ஆனால் இந்த முறை ஒரு வாக்காளருக்கு தேர்தல் ஆணையம் எவ்வளவு செலவு செய்துள்ளது தெரியுமா? ரூ72 அதாவது ஒவ்வொருவரும் வந்து வாக்களிப்பதற்காக ரூ72ஐ அரசு செலவு செய்கிறது.

கடந்த 1957ம் ஆண்டு நடந்த பொது தேர்தல் தான் இருப்பதிலேயே குறைவான செலவில் நடந்த தேர்தல் இந்த தேர்தலுக்கு மொத்தமே ரூ5.9 கோடி தான் செலவானது. இந்த தேர்தலில் ஒரு வாக்காளருக்கு 30 பைசா மட்டுமே அரசு செலவு செய்தது.

தேர்தல் செலவுகள் இவ்வளவு அதிகமாகியிருப்பதற்கு முக்கியமான காரணம் அதிகமான மக்கள் தொகை, மேலும் தேர்தலில் மக்கள் வாக்களிக்க விளம்பரம் செய்ய ஆகும் செலவுகள், பாதுகாப்பிற்கான செலவுகள் தான். மேலும் தற்போது வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. இதுவும் தேர்தல் செலவை அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஒவ்வொரு ஒட்டிற்கும் இவ்வளவு பணம் செலவு செய்கிறது என்றால் இந்த பணம் எல்லாம் நாம் வரிகளாக கட்டும் பணம் தான். இவ்வளவு பணம் அரசு செலவு செய்தும் வாக்களிக்காமல் இருப்பவர்களை என்ன செய்வது?

அடுத்த செய்தி