ஆப்நகரம்

47ஆண்டுகளுக்கு முன்பு காணமல் போன மோதிரம் மீண்டும் கிடைத்த அதிசயம்

அமெரிக்காவில் 47 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன மோதிரம் மீண்டும் திரும்ப கிடைத்த அதிசயம் சமீபத்தில் நிகழந்துள்ளது.

Samayam Tamil 18 Feb 2020, 3:16 pm
அமெரிக்காவைச் சேர்ந்தவர் டெப்ரா மெக்கென்னா. இவர் சிறு வயதில் போர்ட் லேண்ட் என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தான் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். அங்கு தன்னுடன் படித்த ஷான் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் காதலிக்கத் துவங்கி 47 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஷான் உடல் நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார்.
Samayam Tamil ring


இவர்கள் காதலிக்கும்போது ஷான் இவருக்கு ஒரு மோதிரத்தைப் பரிசளித்துள்ளார். அந்த மோதிரத்தை அப்பொழுது டெப்ரா தெரியாமல் தொலைத்துவிட்டார். அப்பொழுது மோதிரத்தைத் தேடிப் பல இடங்களில் அலைந்துள்ளார். ஆனால் அந்த மோதிரம் கிடைக்கவில்லை. அந்த மோதிரத்தை ஷான் மற்றும் டெப்ராவின் பெயரும் அவர்கள் பள்ளியில் சந்தித்துக் காதலித்ததால் பள்ளியில் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெப்ரா மோதிரம் கிடைக்காமல் கவலையில் ஆழ்ந்துவிட்டார். நாட்கள் உருண்டோடியது. இருவரும் திருமணம் செய்து குழந்தைகள் பெற்று ஷான் மறைந்துவிட்டார். இந்நிலையில் பின்லாந்தில் உள்ள கரீனா என்ற பூங்காவை ஊழியர் ஒருவர் சுத்தம் செய்து கொண்டிருந்த போது அவருக்குக் கையில் இந்த மோதிரம் கிடைத்துள்ளது.

Also See: தமிழ் சினிமாவும் - டாம் அண்ட் ஜெர்ரியும் - அசர வைக்கும் மீம்ஸ்

அவர் பள்ளியின் பெயரைப் பார்த்து பள்ளியில் இந்த மோதிரம் குறித்து விசாரித்த போது இவர்களது காதல் கதை தெரியவந்தது. அங்கிருந்து இவர்களது முகவரியை வாங்கி அந்த மோதிரத்தை இவர்களுக்கு கொரியர் அனுப்பியுள்ளார்.

இந்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்ததும் அதில் ஷான் தனக்கு அனுப்பிய மோதிரம் இருந்ததைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டுக் கதறி அழுதார். இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி