ஆப்நகரம்

கோமாவிலிருந்தவர் நினைவு திரும்பியதும் என்ன செய்தார் தெரியுமா?

அமெரிக்காவில் கோமாவிலிருந்த ஒருவர் நினைவு திரும்பியதும் சிறந்த ஓவியரான சம்பவம் குறித்த முழு தகவலை கீழே காணுங்கள்.

Samayam Tamil 10 Jan 2020, 12:29 pm
அமெரிக்காவின் நார்த் கரோலினா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்காட் மேல் 42 வயதான இவர் கார் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2015ம் ஆண்டு அதிவேகத்தில் காரில் பயணித்த போது விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு மூளையில் அடிபட்டு சுயநினைவை இழந்தார்.
Samayam Tamil Aamerican coma Artist


இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்காட்மேல் கோமா நிலையிலேயே இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவர் திடீரென கண்விழித்துவிட்டார். கோமாவிலிருந்த ஸ்காட் சுய நினைவிற்குத் திரும்பியபின்பு அவருக்கு ஓவியம் வரைவது மீது அசாத்தியமான விருப்பம் வந்துவிட்டது.

Also Read : முன்பக்க ஆண் முகம், பின் பக்கம் பெண் முகம்... உலகை அதிசயக்க வைத்த மனிதன் வாழ்ந்தது உண்மையா?

இதற்கு முன்பு ஓவியம் வரையும் பழக்கமே இல்லாத இவர். கோமாவிலிருந்து திரும்பிய பின்பு ஒரு கை தேர்ந்த ஓவியரைப்போல விதவிதமாக ஓவியங்களை வரைந்து அசத்த துவங்கியுள்ளார். இது பலரை வியப்படையச் செய்துள்ளது. இது குறித்து டாக்டர்கள் சொல்லும்போது மூளையில் பாதிப்பு ஏற்பட்டுச் சரியாகும் போது சிலருக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.

இசை, ஓவியம் இப்படியான கலைகளில் முன் அனுபவம் எதுவும் இன்றி அவர்களால் மிகசிறப்பாக செயல்பட முடியும் அப்படியா சம்பவம் நடப்பது அரிது . ஸ்காட்மேலுக்கு தற்போது அப்படியான ஒரு விளைவு ஏற்பட்டதால் தான் அவரால் அசாத்தியமான ஓவியங்களை அனுபவங்களேயன்றி வரைய முடிகிறது.

அடுத்த செய்தி