ஆப்நகரம்

குறுக்கு வழியில் வீட்டிற்கு சென்ற வரை கடித்து குதறி கொன்ற 100 தெரு நாய்கள்

அமெரிக்காவில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு குறுக்கு வழியில் செல்ல முயன்றவரை 100 நாய்கள் சேர்ந்து கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Jul 2019, 5:08 pm
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 45 வயதானவர் மெல்வின் ஓல்ட்ஸ், இவர் கடந்த 4ம் தேதி அலுவலகம் போய்விட்டு வீட்டிற்கு வரும் போது குறுக்கு வழியாக வீட்டிற்கு வர எண்ணி ஒரு வழியை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த முடிவிற்கு அவரது வாழ்க்கைக்கே முடிவை ஏற்படுத்தும் என அவர் எண்ணியிருக்கவில்லை.
Samayam Tamil குறுக்கு வழியில் வீட்டிற்கு சென்றவரை கடித்து குதறி கொன்ற 100 நாய்கள்


ஓல்ட்ஸ் குறுக்கு வழியில் வீட்டிற்கு வரும்போது அந்த பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக நின்றுள்ளன. பொதுவாக அந்த பகுதி வழியாக மனிதர்கள் நடமாட்டம் குறைவு என்பதால் நாய்கள் ஓல்டஸை பார்த்து குறைத்திருக்கிறது. இதனால் பயந்து போய் அங்கேயே நின்றிருக்கிறார்.

ஆனால் நாய்கள் அதோடு விடாமல் அவரை கடித்து குதறியிருக்கிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஓலட்ஸ் வீட்டிற்கு வராததால் அவரது தேடிச்சென்ற அவரது உறவினர்கள் அவர் நாய் கடி பட்டு பலியாகி கிடந்தது தெரியவந்தது.

அவரது உடலை ஆய்வு செய்த டாக்டர்கள் அவரை சுமார் 100 நாய்கள் கடித்து குதறியிருக்கலாம் என கூறினர். 100 நாய்கள் சேர்ந்து ஒ ரு மனிதனை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி