ஆப்நகரம்

விபத்தில் சிக்கிய காருக்குள்ளேயே இருந்து டிக்டாக் செய்த பெண்கள் வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில் இரண்டு பெண் கார் விபத்தில் சிக்கிய போதும் அந்த காருக்குள்ளேயே இருந்து டிக்டாக் மற்றம் டப்ஸ் மாஷ் வீடியோக்களை செய்து வெளியிட்டது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 4 Dec 2019, 10:45 am
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது கார் வளைவுப் பாதையில் திரும்பியபோது கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.
Samayam Tamil America tik tok car accident


விபத்தில் சிக்கியதும் இது குறித்து அவர்களே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதற்கிடையில் அப்பகுதிக்கு போலீசார் வரும் வரை அவர்கள் சும்மா இருக்காமல் விபத்தில் சிக்கிய காருக்குள்ளேயே அமர்ந்து டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


Also Read : கஸ்டமர் கேருக்கு 24,000 முறை கால் செய்து டார்ச்சர் செய்தவர் கைது..!

இது குறித்து டிக்டாக வீடியோவை வெளியிட்ட 16 வயது பெண் கேட்டி கார்னெட்டி என்பவர் கூறும்போது "கார் விபத்தில் சிக்கியதும் நாங்கள் பயந்துவிட்டோம் எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்பு போலீசாருக்கு போன் செய்து தகவலைச் சொன்னோம். அவர்கள் வரும் வரை எங்களுக்குள் இருந்த பயத்தை போக்கவே டிக்டாக் வீடியோ எடுத்துப் போடலாம் என முடிவு செய்தோம். உண்மையில் இது எங்களுக்கு நல்ல பலனைத் தந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "இந்த 5 கொலைகளையும் செய்தவன் நான் தான் முடிந்தால் கண்டுபிடியுங்கள்" என கடிதம் எழுதியவனை 130 ஆண்டுகளாக தேடும் போலீஸ்

விபத்தில் சிக்கிய பெண்கள் அதைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் டிக்டாக் வீடியோக்களை எடுத்தது தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பலர் இந்த பெண்களை விமர்சனம் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி