ஆப்நகரம்

குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!

வங்கதேசத்தில் உள்ள ஷார்ஷா உப்சில்லா என்ற நகரை சேர்ந்த 20 வயது பெண் அரிஃபா சுல்தானா, இவர் திருமணமாகி கர்ப்பமாக இருந்தார். சுமார் 9 மாத கர்ப்பமாக இருக்கும் போதே அதவாது கடந்த பிப். 25ம் தேதி இவருக்கு வலி ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Mar 2019, 3:21 pm
வங்கதேசத்தில் உள்ள ஷார்ஷா உப்சில்லா என்ற நகரை சேர்ந்த 20 வயது பெண் அரிஃபா சுல்தானா, இவர் திருமணமாகி கர்ப்பமாக இருந்தார். சுமார் 9 மாத கர்ப்பமாக இருக்கும் போதே அதவாது கடந்த பிப். 25ம் தேதி இவருக்கு வலி ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்


இதனால் இவர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அவருக்கு பிரசவம் ஆகும் என டாக்டர்கள் சொன்ன நிலையில் சில மணி நேரங்களில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதுவும் சுகபிரசவமாக பிறந்தது. குறை மாதத்தில் பிறந்தாலும் குழந்தை நல்ல வளர்ச்சியுடன் இருந்ததால் டாக்டர்கள் அவர்களுக்கு வழக்கம் போல சிகிச்சை அளித்து தாயையும் குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
Read More: 3 நிமிடத்தில் 300 கி.மீ. இலக்கை தாக்கிய ஏவுகனை..! மிஷன் சக்தியால் இந்தியாவிற்கு என்ன நன்மை?

இந்நிலையில் கடந்த 22ம் தேதி இவருக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தை பிறந்த பின்பு இந்த வலி ஏன் ஏற்படுகிறது என் குழம்பிய அரிஃபா மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் வயிற்றில் குழந்தை இருப்பது தெரியவந்தது. அதுவும் இரட்டை குழந்தையாக இருந்துள்ளது.

அந்த குழந்தைகளை டாக்டர்கள் சிசேரியன் மூலம் வெளியே எடுத்தனர். கடந்த மாதம் தான் அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில் மீண்டும் எப்படி அதுவும் இரட்டை குழந்தை பிறந்தது என டாக்டர்களுக்கு சந்தேகம் எழுந்து அவரை சோதனை செய்த போது.
Read More: தொடர்ந்து 3 வாரம் தேர்வையும் மறந்து தூங்கிய கல்லூரி மாணவி...! காரணம் என்ன தெரியுமா?

அவருக்கு முதலிலேயே கருவில் மூன்று குழந்தைகள் இருந்துள்ளது. இதை அவர் கவனிக்காமல் இருந்துள்ளார். அதில் ஒரு குழந்தை மட்டும் குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. அதன் பின் இரண்டு குழந்தைகள் சிசேரியன் மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
Read More: வங்கி கணக்கில் 15 லட்சம் விழுமோ என காத்திருந்த மக்கள்...! இந்தியாவில் 1 மணி நேரம் திக் திக் திக்...!

தற்போது தாயும் 3 குழந்தைகளும் நலமாக இருக்கின்றனர். இந்த 3 குழந்தைகளும் தனக்கு கிடைத்த வரம் என அந்த குழந்தைகளின் தந்தை தெரிவித்துள்ளார். முதலில் இந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

அடுத்த செய்தி