ஆப்நகரம்

கிறித்துமஸ் அலங்காரத்தில் நகர் முழுவதும் ஆணுறுப்பு வடிவ விளக்குகள், மன்னிப்புக் கேட்ட மேயர்!

நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, வெள்ளை மற்றும் நீல நிறத்திலான விளக்குகளை, விறைப்புக் கொண்ட ஆணுறுப்பு வடிவில், தெரியாமல் அலங்கரித்த மேயர். பிறகு, மன்னிப்புக் கோரினார்.

Samayam Tamil 23 Nov 2020, 2:17 pm
  • பெல்ஜியமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இப்போதே சூடுப்பிடிக்க துவங்கிவிட்டது. வீட்டின் உள்ளேயும், வெளிப்புறத்திலும் விளக்கு அலங்காரங்கள் அசத்தலாக செய்து வருகின்றனர் மக்கள்.
  • இச்சமயத்தில், பெல்ஜியம் மேயர் ஒருவர், நகர் முழுவதும் அமைத்த கிறிஸ்துமஸ் விளக்கு அலங்காரம் நெட்டில் வைரலாகவும், கேலிக்கூத்தாகவும் ஆனதால், அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் மேயர் ஒருவர், நகர் முழுவதும் வெள்ளை மற்றும் நீல நிற விளக்குகள் கொண்டு வரிசையாக கிறிஸ்துமஸ் அலங்காரம் செய்திருந்தார். ஆனால், அவர் தன்னையறியாமல், அந்த அலங்கார வடிவதை, விறைப்புக் கொண்ட ஆணுறுப்பு வடிவில் அமைத்துவிட்டார்.
Samayam Tamil belgian mayor issues apology after his phallic shaped christmas decor light gone viral and trolled
கிறித்துமஸ் அலங்காரத்தில் நகர் முழுவதும் ஆணுறுப்பு வடிவ விளக்குகள், மன்னிப்புக் கேட்ட மேயர்!


பெல்ஜியம் நாளேடான HCL தனது நாளேட்டில், மேயர் ஆணுறுப்பு வடிவிலான அலங்கார விளக்குகளை ஏறத்தாழ 90க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வீதி முழுக்க அமைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.


இந்த சம்பவம், பெல்ஜியம் நாட்டின் சிறு நகரமான ஓவ்டன்பர்க் என்ற இடத்தில் நடந்துள்ளது. இந்த புகைப்படங்கள், கேலியான வாக்கியங்களுடன் நெட்டில் வைரலாக பரவியது. இதை அறிந்த மேயர், தனது மன்னிப்பை கூறினார்.

மேயர் அந்தோணி டமரே, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் மிகவும் குறைவாக இருந்தது. ஆகையால் தான், எங்கள் தொழில்நுட்ப துறையே, அவர்களால் முடிந்த அளவில் சொந்தமாக இவ்வாறு அலங்காரம் செய்தனர்.

இந்த அலங்காரம் வேண்டுமென்றே செய்யப்பட்டது அல்ல. விளக்குகள் Offல் இருந்த போது, இப்படியான தோற்றம் வெளிப்படவில்லை. இரவு, ஒளிரவிட செய்த போது தான், இப்படியான தோற்றம் தென்பட்டது. அந்த வித்தியாசத்தை மக்களே கண்டிருப்பார்கள்.

இது ஒரு பெரிய பிரச்னை இல்லை. இந்த சமயம் அலங்காரம் கொஞ்சம் காமெடி ஆகிவிட்டது. மேலும், இந்த விளக்குகள் அகற்றப்பட போவடதில்லை. இது உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளதாலும், நிறைய பேர் உலக செய்திகளில் இதை பதிவிட்டு வருவதாலும், இதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்ளலாம், என்று கூறி இருந்தார்.

அடுத்த செய்தி