ஆப்நகரம்

Bhogi Wishes: பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே போகி..!

போகி பண்டிகை வாழ்த்துக்கள், கவிதைகள், புகைப்படங்கள் மற்றும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.

Samayam Tamil 13 Jan 2020, 12:57 pm
தமிழ் மார்கழி மாதம் கடைசி தேதி போகி பண்டிகையாகும் மறுநாள் பிறக்கும் தை திருநாளில் பழையன கழித்து புதியன புகவேண்டும் என்பதற்காக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
Samayam Tamil bhogi festival greetings images sms quotes whatsapp facebook status messages in tamil
Bhogi Wishes: பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே போகி..!


1. “ஏதாவது சிலவற்றை,
இன்றைக்கு
கொளுத்திவிட வேண்டும்..”
அடித்துச் சொன்னாள்
அப்பத்தா..

புகையில்லா போகியென
உறுதியாய் இருந்ததில்
அப்பத்தாவின் பேச்சை
அகங்காரத்துடன்
அசட்டை செய்தேன்..,

“கொளுத்த உன்னிடம்
எதுவும் இல்லையெனில்
முதலில்
அகங்காரத்தையாவது கொளுத்து,
அப்புறம் யோசித்துப் பார்..!”

அப்பத்தா சொன்னதிலிருந்து
யோசிக்கத் துவங்கினேன்..
என்னுடலே தீயாய் தகிக்கிறது..!


2. பயனற்ற பொருளைப்
போக்கத்தானே போகி
வீணாய்ப் போவதை எரித்து
புகை எழுப்பி காற்றின்
தூய்மையைக் கெடுக்கும்
கொடுஞ்செயலா போகி?
போகிகளுக்கு நாசப் பொழுது போக்கு!
இயற்கையைக் காயப்படுத்த
திருவிழா தேவையென்ற ஞானி யார்?


3. தீயதை கழித்து
நல்லதை சேர்ப்போம்

நல்ல செயலுக்காய்
கைகளை கோர்ப்போம்

பழையதை கொளுத்தி
புதியதை படைப்போம்

புதியதில் நேர்மையை
பின்பற்றி நடப்போம்

உண்மையும் ஜெயித்திட‌
உண்மையாய் உழைப்போம்

தீமையை தீயிட்டு
சுத்தமாய் அழிப்போம்

நம்மையே மாற்றினால்
நானிலம் மாறிடும்

நலங்களும் கிடைத்திடும்
இதயங்கள் வாழ்த்திடும்

அடுத்த செய்தி