ஆப்நகரம்

Karaikudi Vadivelu Mashup : "சிங்... இன் தி ரெயின்...." மேஷ் அப்பில் மெர்சல் காட்டிய சிறுவர்கள்...

காரைக்குடியில் சிறுவனர்கள் காமெடி வசனங்களை வைத்து மேஷ் அப் செய்து அதற்கு நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 13 Feb 2020, 3:17 pm
இன்று சினிமா உலகில் அதிகமான படங்கள் இல்லாவிட்டாலும் இன்றும் மீம்ஸ்கள் மூலம் இளைஞர்கள் மனதில் என்றும் இருப்பவர் வடிவேலு கிட்டத்தட்ட 10-15 ஆண்டுகளில் அவர் நடித்த படங்களில் உள்ள காட்சிகளில் எல்லாமே இருக்கிறது. தற்போது நடக்கும் விஷயங்களுக்கு மீம்ஸ் மற்றும் ரியாக்ஷன் தேடினால் கூட வடிவேலுவின் ரியாக்ஷன் இருக்கும்.
Samayam Tamil vadivelu mashup


இந்நிலையில் காரைக்குடியில் சமீபத்தில் நடந்த ஒரு புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சியில் மாணவர்கள் சிலர் வடிவேலு மற்றும் சில நகைச்சுவை காட்சிகளின் ஓசைகளைவைத்து மேஷ அப் செய்து அதற்கு நடனமாடினர். வடிவேலு மற்றும் கவுண்டமணி ஆகியோரின் ஆடியோக்களை வைத்து இவர்கள் ஆடிய இந்த ஆட்டம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ.


Also Read : உண்மையிலேயே ரேடியோவை முதலில் கண்டுபிடித்தவர் ஒரு இந்தியர் என எத்தனை பேருக்கு தெரியும்?

இந்த வீடியோவை பலர் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி