இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு பிறந்தநாள். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் கனவான உலககோப்பையை இந்தியாவை கைபற்ற வைத்தவர் தோனி, இவரது தலைமையிலான அணி தான் இந்தியாவிற்கான உலககோப்பையை வென்றது. இவரது தனித்துவமான விளையாட்டு, இவரது விளையாடும் ஸ்டைல் என பல விஷயங்கள் இவரது ரசிகர்களை இவர் மீது பைத்தியமாக்க செய்தது.
இந்நிலையில் அவர் பள்ளியில் படிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அவருடன் படித்த அனைவரும் இருக்கின்றனர். அவரும் இருப்பதாகவும் அவரை கண்டுபிடிக்கும்படியும் அந்த புகைப்படம் பகிரப்படுகிறது.
இந்த புகைப்படத்தில் தோனி எங்கே இருக்கிறார் என நீஙகள் நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.