ஆப்நகரம்

தங்க கம்மலை விழுங்கிய கோழி; வளர்த்தவர் என்ன செய்தார் தெரியுமா?

சென்னையில் தான் வளர்த்த கோழியில் தங்க கம்மலை விழுங்கியதால் அதற்கு அறுவை சிகிச்சை செய்து தங்க கம்மலை வெளியே எடுத்தனர். ஆனால் பரிதாபமாக அந்த கோழி இறந்துவிட்டது.

Samayam Tamil 10 Aug 2019, 6:42 pm
சென்னை புரசைவாக்கம் நெல்வயல் லேண்ட் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லை. இதனால் விலங்குகள் மீது பரியம் கொள்ள ஆரம்பித்தார். இவர் வீட்டில் நாய், வளரக்க முடியாத சூழலால் கடந்த ஒரு வருடமாக கோழி ஒன்றை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.
Samayam Tamil தங்க கம்மலை விழுங்கிய கோழி


சிவக்குமார் வீட்டிற்கு அவரது அக்காவின் மகள் தீபா அடிக்கடி வந்து செல்வது வழக்கம் அப்படியாக கோழி மீது தீபா மிகுந்த பாசத்தை காட்டி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவக்குமார் வீட்டிற்கு சென்ற தீபா தனது தங்க கம்மலை கழட்டி வைத்து தன் முடியை சீவிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவரை சுற்றி வந்த அந்த கோழி அவர் கீழே வைத்திருந்த தங்க கம்மலை கொத்தி விழுங்கிவிட்டது.

இதை எதிர்பாராத தீபா அதிர்ச்சியடைந்து இதை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிவக்குமார் வீட்டார்கள் அந்த கோழியை அண்ணா நகரில் உள்ள ஒரு கால் நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

Read More: நீச்சல் குளத்திற்கு அடியில் கிடந்த 300 கிலோ தங்க கட்டிகள்...!

அப்பொழுது தீபா டாக்டரிடம் தனக்கு தங்க கம்மல் முக்கியமல்ல அதை விழுங்கியதால் கோழிக்கு எதுவும் ஆகக்கூடாது என டாக்டரிடம் கூறியுள்ளார். உடனடியாக டாக்டர் உண்மையிலேயே தங்க கம்மல் கோழியின் வயிற்றில் தான் உள்ளதா? என்பதை அறிய எக்ஸ் ரே எடுத்தார். அப்பொழுது கோழியின் இரைப்பையில் தங்க கம்மல் இருப்பது தெரிந்தது.

தங்கம் கழிவுடன் சேர்ந்து வெளியே வராது என்பது அதை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துவிடலாம் என முடிவு செய்தனர். இதையடுத்து சிவக்குமாரின் சம்மதத்துடன் கோழிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Read More: சோமாட்டோவில் பொம்மை ஆர்டர் செய்த சிறுவன்...! அதற்கு அந்நிறுவனம் என்ன செய்தது தெரியுமா?

சுமார் 30 நிமிடம் தீவிர அறுவை சிகிச்சை நடந்த நிலையில் கோழியின் இரைப்பையில் இருந்த தங்க கம்மல் அகற்றப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக கோழி அறுவை சிகிச்சையின் போதே பலியாகிவிட்டது.

அறுவை சிகிச்சையின் போது கம்மல் குத்தி கோழி பலியாகிவிட்டதாக டாக்டர் சிவக்குமாரிடம் தெரிவித்தார். இதை கேட்டதும் சிவக்குமார் அந்த இடத்திலேயே கதறி கதறி அழுதார். தன் குழந்தைபோல் வளர்த்த கோழி பலியாகிவிட்டதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

Read More: Nerkonda Paarvai படம் வரும் என 2016லேயே சொன்ன ஜோஃப்ரா ஆர்ச்சர்- வைரலாகும் டுவிட்

பின்னர் கோழியின் உடலை தன் வீட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தார். கோழி கிடைத்தால் அதை குழம்பு வைத்து சாப்பிட தோன்றும் அசைவ பிரியர்களுக்கு மத்தியில் இப்படி கோழியின் சாவுக்காக ஒருவர் கதறி அழுத சம்பவம் பலரை உருக வைத்துவிட்டது.

அடுத்த செய்தி