ஆப்நகரம்

Free Food: 1 கிலோ குப்பைக்கு இலவச உணவு - வைரலாகும் புதிய ரெஸ்டாரென்ட்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு இலவச உணவு வழங்க நகர கார்பரேஷன் திட்டத்தை அறிவித்துள்ளது.

Samayam Tamil 27 Jul 2019, 6:15 pm
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் உள்ள முனிசில் கார்பரேஷன் பிளாஸ்டிக் கிழிவுகளை சரியானமுறையில் அப்புறப்படுத்த ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்றுள்ளது.
Samayam Tamil 1 கிலோ குப்பைக்கு இலவச உணவு


முனிசிபல் கார்பரேஷன் சார்பில் கார்பேஜ் கஃபே என்ற ஒரு உணவு விடுதி துவங்கப்பட்டுள்ளது. அந்த விடுதியில் மக்கள் தங்கள் வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கிழவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தால் அந்த எடைக்கு நிகராக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More: ஓரின சேர்க்கை LGBT இது தான் காரணமாம்...! பாதிரியாரின் பகீர் விளக்கம்...!

அதன் படி ஒருவர் அரைக்கிலோ பிளாஸ்டிக் குப்பையை ஒருவர் கொண்டு வந்து கொடுத்தால் அவருக்கு காலை உணவு, ஒரு கிலோ குப்பைக்கு மதிய உணவு என அனைத்தையும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதன் மூலம் கணிசமாக பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக ரீசைக்கிள் செய்யமுடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி