ஆப்நகரம்

நெஞ்சு வலி குறித்து காமெடி செய்தவர் அடுத்த விநாடியே நெஞ்சு வலியால் மரணமடைந்தார்

ஸ்டாண்ட் அப் காமெடியன் ஒருவர் நெஞ்சுவலி வரும் போது சிபிஆர் கொடுத்தாலும் எந்த வித பயனும் இல்லை என காமெடி செய்த போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

Samayam Tamil 15 Apr 2019, 4:35 pm
லண்டனை சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடி கலைஞர் பவுல் பார்பெர்ரி, இவர் இயான் காக்னிட்டோ என்ற பெயரில் ஸ்டாண்ட் அப் காமெடிகளை செய்து வருகிறார்.
Samayam Tamil நெஞ்சு வலி குறித்து காமெடி செய்தவர் அடுத்த விநாடியே நெஞ்சு வலியால் மரணமடைந்தார்


இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் காமெடி செய்து கொண்டிருக்கும் போது நெஞ்சுவலி வருவது குறித்து காமெடி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் அருகில் இருந்த ஸ்டூலில் உட்கார்ந்து நெஞ்சில் கையை வைத்தார். அவர் நெஞ்சுவலி வருவது போல் நடித்து ஏதோ காமெடிக்கு முயற்சி செய்வதாக பார்வையாளர்கள் கருதினர். திடீரென சில நொடிகளில் அவர் ஸ்டூலில் இருந்து கீழே விழுந்து விட்டார்.

இதையடுத்து பார்வையாளர்கள் இது ஏதோ வீபரீதம் என உணர்ந்து, அனைவரும் சென்று அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் மயக்க நிலையில் இருந்ததால் அம்புலன்ஸில் அவரை கொண்டு போய் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானர்.
Read More: ஓட்டுபோட ரூ21 ஆயிரம் செலவு செய்து விமான டிக்கெட் எடுத்தவரின் டிக்கெட் திடீரென கேன்சல் ஆனது... ஏன் தெரியுமா?

இந்த சம்பவத்திற்கு முன்னர் அவர் நெஞ்சுவலி வரும் போது சிபிஆர் கொடுத்தாலும் எந்த வித பயனும் இல்லை என காமெடி செய்துள்ளார். நெஞ்சு வலி குறித்து பேசிக்கொண்டிருக்கும் போதே ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து டுவீட்டரில் அவரது ரசிகர்கள் அவருக்கு செலுத்திய அஞ்சலியை கீழே காணுங்கள்.
Read More: பிரிட்டனில் இந்தியாவின் மானத்தை வாங்கிய குஜராத்திகள்; பான் எச்சில் துப்புவதால் வந்த விணை..!

Read More: தேர்தல் உற்சாகத்தில் "நாகினி டான்ஸ்" ஆடிய அமைச்சர்...!


அடுத்த செய்தி