ஆப்நகரம்

"தாலியுடன் நிர்வாணம்" என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி அதுவும் நம்ம ஊரில்..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சித்ரகலாபிசாத் என்ற பகுதியில் கடந்த 22ம் தேதியியில் இருந்து, வரும் 31ம் தேதி வரை ஒரு ஓவிய கண்காட்சி நடப்பதாக இருந்தது. இந்த கண்காட்சியை சுஜித்குமார் ஜிஎஸ் மாண்டியா என்பவர் ஏற்பாடு செய்திருந்தார்.

Samayam Tamil 23 Mar 2019, 4:32 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சித்ரகலாபிசாத் என்ற பகுதியில் கடந்த 22ம் தேதியியில் இருந்து, வரும் 31ம் தேதி வரை ஒரு ஓவிய கண்காட்சி நடப்பதாக இருந்தது. இந்த கண்காட்சியை சுஜித்குமார் ஜிஎஸ் மாண்டியா என்பவர் ஏற்பாடு செய்திருந்தார்.
Samayam Tamil தாலியுடன் நிர்வாணம் என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி அதுவும் நம்ம ஊரில்


இந்த காட்சியில் "தாலியுடன் நிர்வாணம்" என்ற தலைப்பில் சில ஓவியங்கள் காட்சி படுத்தப்படவிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்து ஜனஜக்ருதி சமிதி என்ற அமைப்பின் நிர்வாகியான பவ்யா கவுடா என்பவர் பெங்களூரு போலீஸ் கமிஷ்னருக்கு இந்த ஓவிய கண்காட்சி நடத்த தடை விதித்து கடிதம் எழுதியிருந்தார்.
Read More: வயதிற்கு வந்த பெண் மற்ற ஆண்களுடன் உல்லாசமாக இருக்க பெற்றோரே கட்டித்தரும் "காதல் குடிசை"

அந்த கடிதத்தில் அவர் " "தாலியுடன் நிர்வாணம்" என்ற தலைப்பே இந்து மக்களின் மனதை புண்படுத்துவதற்காக வைக்கப்பட்ட தலைப்பு. இந்து மதத்தில் தாலி என்பதற்கு மிக நீண்ட நாட்களாக கடைபிடிக்கப்படும் பண்பாடு, அதற்கு களங்கம் ஏற்படுத்து விதமாக இந்த தலைப்பு உளளது.

படைப்பாளிகளுக்கு படைப்பு சுதந்திரம் என்பது வழங்கப்பட வேண்டியது தான் ஆனால் அவர்கள் படைப்பு தந்திரம் என்ற பெயரில் மற்றவர்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் செயல்படுவதை அனுமதிக்ககூடாது.
Read More: குளர் பானத்தில் வயகரா கலந்ததால் 6 மணி நேர "விரைப்பால்" தவித்த ஆண்..!

முக்கியமாக தற்போது தேர்தல் காலத்தில் இது போன்ற செயலில் ஈடுபடுவது. கலை என்பதையும் தாண்டி இது அரசியல் ரீதியாக மக்களின் கவனத்தை திசை திருப்பும் நிகழ்ச்சி.

இந்தியாவில் பெண்மை என்பது தாய்மையாக போன்றப்படுகிறது அதற்கு ஏற்படும் சிறு களங்கத்தையும் யாராலும் ஏற்றக்கொள்ள கூடாது. இந்த கண்காட்சி நடந்தால் அது மிகப்பெரிய அளவில் சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்,
Read More: கர்ப்பிணியாக பிறந்த பெண் குழந்தை..! கருவுக்குள் கரு சென்ற அதிசயம்

மேலும் இந்த கண்காட்சி பெண்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1986ன் படி விதிமுறை மீறலும் கூட அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி