ஆப்நகரம்

அரசியலமைப்பு தின நாள் அம்பேத்கர் பொன் மொழிகள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

அரசியலமைப்பு நாள் இன்று இந்த நாளுக்கான விளக்கமும் வாழ்த்துக்களும் இங்கே வழங்கியுள்ளோம் காணுங்கள்

Samayam Tamil 25 Nov 2019, 9:37 pm
இன்று இந்திய அரசியலமைப்பு தினம். சுதந்திர தினம் தெரியும் குடியரசு தினம் தெரியும் அது என்ன அரசியலமைப்பு தினம் என நீங்கள் நினைக்கலாம்
Samayam Tamil ambedkar


இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி அம்பேத்கர் தலைமையிலான அமைப்பு உருவாக்கியது நமக்குத் தெரியும். அந்த அமைப்பு அரசியலமைப்பை முழு வடிவத்திற்குக் கொண்டு வந்ததும் அதை ஏற்றுக்கொண்ட நாள் தான் இந்த அரசியலமைப்பு தினம்

1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இது ஏற்கப்பட்டு 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இது நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளை தான் நாம் அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடுகிறோம்.

இந்த நாளில் அன்னல் அம்பேத்கரின் சில பொன் மொழிகளை இங்கே வழங்கியுள்ளோம் அதை உங்கள் பேஸ்புக் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களாக வைத்துக்கொள்ளுங்கள்

1.ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் - டாக்டர் அம்பேத்கர்

2.பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல சிங்கங்களாக இருங்கள் - டாக்டர் அம்பேத்கர்

3. உலகில் யாரும் தெய்வீகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்துத் தான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது - டாக்டர். அம்பேத்கர்

4. தன்னை உயர்ந்த ஜாதியாகவும் இன்னொரு மனிதனைத் தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி - டாக்டர். அம்பேத்கர்

5. வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான் - டாக்டர். அம்பேத்கர்

6.மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம் - டாக்டர். அம்பேத்கர்

அடுத்த செய்தி