ஆப்நகரம்

கொரோனா நோயாளிக்கு நேர்ந்த கதியை பார்த்தீர்களா?

லண்டனில் கொரோனா நோயாளியை வீட்டை காலி செய்ய சொல்லிய கொடுமை நடந்துள்ளது.

Samayam Tamil 23 Mar 2020, 9:26 am
உலகம் முழுவதும் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களை எப்படியாவது அதிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறனர்.
Samayam Tamil uk corona


இந்நிலையில் லண்டனில் தேசிய சுகாதார சேவை பிரிவில் பணியாற்றி வருபவர் ஜோசப் இந்த தேசிய சுகாதார சேவைப்பிரிவு கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் உதவியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். ஜோசப்பும் அந்த பணியில் தான் இருந்துள்ளார்.

Also Read : கொரோனா பரவாமல் தடுக்க என்ன செய்யனும்? வைரலாகும் வடிவேலு மீம்ஸ்....

இந்நிலையில் ஜோசப்பிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு ஜோசப்பிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட விஷயம் தெரிந்துவிட்டது. அவர் ஜோசப்பிற்கு வாட்ஸ் அப் மூலம் தன் வீட்டை காலி செய்து தரும் படியும், தன் வீட்டிற்கு அவர் வராமல் ஆட்களை அனுப்பி பொருட்களை எடுத்து செல்லும்படியும் கூறியுள்ளார். இந்த வாட்ஸ் அப் சாட் ஸ்கிரீன் ஷாட்களாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதுவரை அது 5ஆயிரம் ரீடுவீட்களையும், 13 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. கொரோனாவிற்காக தற்போது உலகமே அச்சப்பட்டு வரும் சூழ்நிலையில் கொரோனா பாதித்த நோயாளிக்கு நேர்ந்த இந்த கதி தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி