இணையம் என்பது உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான விஷயமாக மாறிவிட்டது. பிரபலமான ஒரு மீமில் வரும் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் தங்களது புகைப்படங்களை மீண்டும் பதிவேற்றி ட்ரெண்டிங் செய்துள்ளனர். இணையம் முழுக்கவே மீம்கள் மிகவும் ட்ரெண்டான விஷயமாக மாறியுள்ளது. தற்சமயம் தகவல்களை கூட பரிமாறி கொள்ள மீம்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மீம் கிரியேட்டர்களை வேலைக்கு எடுக்கும் அளவிற்கு மீம்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலான ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் 10 வருடத்திற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆன ஒரு மீம் இருந்தது. அந்த மீமில் ஒரு காதல் ஜோடி நடந்து சென்று கொண்டிருப்பர். அப்போது எதிரில் சிவப்பு உடையில் ஒரு பெண் செல்வார். உடனே அந்த காதல் ஜோடியில் உள்ள ஆண் காதலி கூட இருக்கும்போதே அந்த பெண்ணை திரும்பி பார்ப்பார்.
வைரல் போட்டோ:
இப்படியாக இருந்த அந்த மீம் கடந்த 10 வருடங்களாக சமூக வலைத்தளங்களில் பல விதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த மீமில் இருக்கும் மூவரும் 10 வருடங்களுகு பிறகு மீண்டும் அந்த மீமை மறு உருவாக்கம் செய்துள்ளனர். தற்சமயம் இந்த விஷயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
ஜான் ஒ கோனல் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுவரை இந்த படம் 2 லட்சம் ரீ டிவிட்களை பெற்றுள்ளது. மேலும் 1 கோடிக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. தற்சமயம் இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.