ஆப்நகரம்

Viral Video : ரயில் தண்டவாளத்தில் விழுந்த மகளை காப்பாற்ற சூப்பர் ஹீரோவாக மாறிய தந்தை

ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்ணை தந்தை சூப்பர் ஹீரோவாக மாறி காப்பாற்றிய விடியோ சமூகவலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது.

Samayam Tamil 30 Jan 2020, 10:52 am
எகிப்து நாட்டின் இஸ்லாமிய நகரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் 50 வயது தந்தை ஒருவர் தனது 13 வயது மகளுடன் ரயில்வே நடைமேடையில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களுக்குப் பின் பகுதியிலிருந்து ரயில்வே தண்டவாளத்தில் வந்த ரயிலிலிருந்து பலமாக ஹாரன் சத்தம் கேட்டது.
Samayam Tamil train


இதைக் கேட்டதும் பதறிப்போன சிறுமி நிலை தடுமாறி அப்படியே தண்டவாளத்திற்குள் விழுந்துவிட்டார். இதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த தந்தை சற்றும் யோசிக்காமல் அவர் தண்டவாளத்திற்குள் குதித்து தனது மகளை எழுந்திருக்க விடாமல் கட்டியணைத்துப் படுத்துக்கொண்டார்.



Also Read : ஒரே ஆளை மூன்று முறை கொல்ல முயற்சி செய்த மின்னல்... இறுதியாக அவர் கல்லறையை தாக்கி பழி வாங்கிய பயங்கரம்....

ரயிலின் படிகட்டுகள் அவரின் முதுகிற்குச் சற்று மேலே சென்றுகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அங்கிருந்த சிலர் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் அந்த தந்தையைப் பாராட்டி வருகின்றனர். நீங்களும் அந்த தந்தையை கமெண்டில் பாராட்டுங்கள்.

அடுத்த செய்தி