ஆப்நகரம்

கல்யாணத்துக்கு முன்னாடியே இத்தனை கண்டிஷனா? - வைரலாகும் திருமண பேனர்

ஈரோடு மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 20 Sep 2019, 11:33 am

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடிபுதுாரில் கடந்த 12ம் தேதி ஸ்ரீதர் - லாவண்யா ஜோடிக்கு திருமணம் நடந்தது இவர்களது திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் தான் சமீபத்தில் சமூகவலைத்தள வைரல் புகைப்படம்.
Samayam Tamil erode marriage banner has 11 conditons for husband from wife this image is now viral on social media
கல்யாணத்துக்கு முன்னாடியே இத்தனை கண்டிஷனா? - வைரலாகும் திருமண பேனர்


இந்த பேனர் லாவண்யா, ஸ்ரீதருக்கு விடுக்கும் 11 கட்டளைகளை உள்ளடக்கியதாக இருந்தது. அந்த பேனரில் இருந்த கட்டளைகளை கீழே காணுங்கள்.

1. உன்னுடைய மனைவி நானாகிறேன். மற்றொறு காதலி உனக்கு இருக்க கூடாது.

2. கண்டவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது, அவளுடைய அழகை வர்ணிக்க கூடாது.

3. இரவு 8.30 மணிக்கு கிச்சன் கிளோஸ்.

பப்ஜியை இந்தியாவில் டிசைன் செய்தால் எப்படி இருக்கும்?- விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் மீம்ஸ்

4. இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் கிளோஸ்

5. தேங்காய் எண்ணெய், சோப்பு, ஷாம்பு, துண்டு ஆகியவற்றை சொந்தமாக எடுத்துக்கொண்டு குளிக்க செல்ல வேண்டும், அதற்காக தொந்தரவு செய்ய கூடாது.

6. ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி, பழைய சாப்பாடாக இருந்தாலும் வீட்டில் சாப்பிட வேண்டும்.

" Mettur Dam Temple - ஐ கட்டியது நான் தான்...! " - வைரலாகும் நித்தியின் அளந்துவிடும் வீடியோ

7. தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வேண்டும்.

8. சாயங்காலம் 6.30 முதல் 9.30வரை சீரியல் டைம். கூப்பிட்டு தொந்தரவு செய்ய கூடாது. பச்ச தண்ணி கூட கிடையாது.

9. உறக்கத்தில் குறட்டை விடவோ சத்தம் போடவோ கூடாது.

கனவில் மோதிரத்தை விழுங்கிய பெண்ணின் வயிற்றிலிருந்து அதே மோதிரத்தை ஆப்ரேஷன் செய்து எடுத்த டாக்டர்

10. மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சன்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்

11. மிக முக்கிய குறிப்பாக என்னிடம் கோபப்பட்டால் எனது அண்ணன்களிடம் இருந்து தர்ம அடி விழும்.


18 கி.மீக்கு ரூ4,300 பில் போட்ட ஆட்டோ டிரைவர்...! அதிகாலையில் நடந்த 'பகல் கொள்ளை'

என எழுத்தப்பட்டிந்தது. இந்த கட்டளைகளுக்கு கீழே தங்கள் கூறிய கட்டளைகளுக்கு சம்மதம் தெரிவித்து தலையாட்டுவதாக மாப்பிள்ளை ஸ்ரீதரின் கையெழுத்து இருந்தது. அத்துடன் அவரது ஆதார் கார்டும் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த பேனர் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பேனர் வைப்பது சாதாரணம் தான். அதற்காக இப்படியெல்லாம் யோசித்து வைக்க கிளம்பிட்டாங்களே என பலர் இந்த பேனரை தங்கள் சமூகவலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி